மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!

மக்கள் மனதின் குரல்: சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள் சுமார் 30 கிலோமீட்டர் தள்ளியுள்ள இன்னொரு பகுதிக்கு கூடியவரைக்கும் விரைந்து செல்ல வேண்டும். அப்படிச் செல்கிறவர்களுக்கு ஜாக்பாட்டாக ஒரு பெரிய தொகை கிடைக்கும். அந்தத் தொகையின் ஒரு பகுதியை வைத்து அன்றைய ரேஸில் கலந்து கொண்டவர்களுக்கு வெற்றி பெற்றவர் உற்சாக விருந்தளிப்பார்.  […]

நீங்கள் பின்பற்றாதவற்றை யாரிடமும் எதிர்பார்க்காதே!

தாய் சிலேட்:  வெற்றிபெறுவதற்கான சிறந்த வழி, நீங்கள் மற்றவர்களுக்குக்  கூறும் அறிவுரைகளின்படி நீங்களே செயல்படுவதுதான்! – நெப்போலியன் ஹில்

சிறகை விட பறவையின் பெரிய நம்பிக்கை!

இன்றைய நச்:  எப்போது வேண்டுமானாலும் திரும்புவதற்கு ஒரு கூடு இருக்கிறது என்பது தான், பறவைக்குச் சிறகை விட பெரிய நம்பிக்கை! – கவிஞர் நேசமித்ரன்  

தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா சிந்துவெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மிக முக்கியமான முன்னெடுப்பு இந்நிகழ்வு. திடீரென சில கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்படும் அகத்திய கருத்தரங்குகளுக்கு பின்னால் இருக்கும் மொழி சார்ந்த அரசியலையும், திணிக்கப்படும் கற்பிதங்களையும் கட்டுடைக்கும் வகையிலான தரவுகள் வழங்கி […]

இளவந்திகைத் திருவிழா: கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கு விருது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் சென்னையில் இளவந்திகைத் திருவிழா நடைபெற்றது. “எங்கள் பெரியார்” என்னும் பாடலை தொல் திருமாவளவன் வெளியிட சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. சிறந்த கவிதை நூலுக்கான விருது கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கும், சிறந்த சிறுகதைக்கான விருது எழுத்தாளர் ஜெயராணிக்கும் வழங்கப்பட்டது. சிறந்த நாவலுக்கு எழுத்தாளர் ஸ்ரீதர் கணேசன், சிறந்த அபுனைவுக்கு எழுத்தாளர் அ.ராமசாமி, […]

தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 450-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் பங்கேற்றனா். அப்போது, அவா்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அழுக்கடைந்த கீறல் […]