வரலாற்றுக்குள் வடிவமைக்கப்பட்ட கட்டுமானம்!

இத்தாலி நாட்டிலே போல்சோனோ அப்படின்னு ஒரு நகரம். அந்த நகரத்துக்குப் பக்கத்திலே 150 ஆண்டுகளுக்கு முன்னாடி சமதளத்திலே ஒரு மாடி வீடு கட்டப்பட்டது.

வீடு கட்டப்பட்ட 7 ஆண்டு கழிச்சு, 1882ஆம் ஆண்டு ஒரு செம வெள்ளம்.

அந்த வீட்டை சுத்திச் சூழ இருந்த எல்லா மண்ணையும் அந்த வெள்ளம் நம்மூர் மணல் கொள்ளையர்கள் மாதிரி அரிச்சிட்டு போயிருச்சு.

அந்த வீடு தொபுகடீர்னு இடிஞ்சு விழப்போகுதுன்னு எல்லோரும் எதிர்பார்த்தாங்க. ஆனா அதுதான் இல்லை.

வெள்ளம் வடிஞ்ச பிறகு, கண்ணுக்குத் தெரியாத ஒரு காவலர், ‘யாமிருக்க பயமேன்’ அப்படின்னு வெளியே தலையைக் காட்டினார்.

அந்த காவலர் வேற யாருமில்லை. ஒரு பெரிய பாறை!

அந்த பாறை மேலேதான் வீடு கட்டப்படிருக்குன்னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது.
பிறகு என்ன?

வீடு சும்மா கன் மாதிரி அந்த பாறை மேலே 150 ஆண்டுகளா இன்னும் நிற்குது. அந்த வீட்டிலே பரம்பரையா குடியிருக்கிறவங்க இன்னும் அங்கேதான் குடியிருக்காங்க.

எழுதிச் செல்லும் விதியும், சரி இயற்கையும் சரி, இப்படித்தாங்க சிலவேளைகள்ல அமைதியா வந்து அதுகளோட கையொப்பத்தை அழகா அழுத்தமா போட்டுட்டுப் போயிரும்.

எனிவே, போல்சோனா பகுதியிலே இருக்கிற இந்த ஒரு மாடி வீடு வெறும் வீடு இல்லைங்க.

இது கல்லில் கட்டப்பட்ட ஒரு வரலாறு அப்படின்னு சொல்லலாம். வரலாற்றுக்குள் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டுமானம் அப்படின்னும் சொல்லலாம்.

– மோகன ரூபன்

Comments (0)
Add Comment