ஆணவக்கொலைகள்: அமைதி காப்பதும் தேர்தல் அரசியல்தான்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்

ஆணவப் படுகொலைகள் உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும்போது இத்தனை திராவிட இயக்கத் தலைவர்கள் வாய் திறக்காமல் அமைதி காப்பதை நான் கடுமையாக கண்டிக்கிறேன், விமர்சனப்பூர்வமாக இதை முன் வைக்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால், இப்படி வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பதே, சாதியத்திற்கு ஆதரவான ஒருபோக்குதான்.

ஒரு சாதியக் கொடுமை நடக்கும்போது, சாதி ஆணவப் படுகொலை நடக்கிறபோது வாயை மூடிக் கொண்டிருப்பதற்கு என்ன அர்த்தம்? அவர்கள் சாதியை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தமா?

இதை விவாதத்திற்காகத் தான் உங்கள் மத்தியிலே முன்வைக்கிறேன்.

இத்தகைய கொடுமை நடக்கும்போழுது எத்தனை திராவிட இயக்கங்கள் அந்த கொடுமைகளுக்கு எதிராக களத்திற்கு வருகிறார்கள்? அறிக்கை விடுகிறார்கள்? நேரடியாக சாதிய ஆதிக்க வெறியர்களுக்காக குரல் எழுப்புகிறார்கள்?

செங்கொடி இயக்கம் தான் இன்றைக்கும் அத்தகைய பிரச்சனைகளில் சமரச போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

வாக்கு வங்கி அரசியலைப் பற்றி கவலைப்படாமல், அவர்கள் வாயை மூடி கொண்டிருப்பதற்கு என்ன காரணம்?

இந்த ஆதிக்க சமூகத்திற்கு எதிராக பேசினால், நாளை அச்சமூகமக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

ஆனால், பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தினரையோ அல்லது பாதிக்கப்பட்ட பழங்குடியினரையோ நாளைக்கு விலை கொடுத்து வாங்கிவிடலாம். அவர்களது வாக்குகளைப் பணம் கொடுத்து வாங்கிவிடலாம்.

ஆகவே, அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை என்கின்ற தேர்தல் அரசியலின் விளைவாகத்தான் இவர்கள் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே வாயை மூடிக் கொண்டிருப்பதும், சாதிய சக்திகளுக்கு ஆதரவான போக்கு என்று குற்றம் சாட்டுகிறேன்.

குறிப்பு: வலையொளியில் பேசிய பேச்சு

Comments (0)
Add Comment