அப்பாதான் மிகப்பெரிய சொத்து…!

சின்னத்திரையில் தற்போது இழுவையாக இழுத்துக் கொண்டே போகும் சீரியல் தொடர்கள் மதிப்பிழந்து போய்க் கொண்டிருக்கும் நிலையில், சில நிகழ்வுகள் கவனிக்க வைக்கும்படி இருக்கின்றன.

‘ஜி தமிழ்’ தொலைக்காட்சியின் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் ஒரு பக்கம் அப்பாக்கள் இன்னொரு பக்கம் அவர்களுடைய மகள்கள்.

தந்தையர்கள் தங்கள் மகள்களைப் பற்றிச் சொல்ல மகள்கள் நெகிழ்வுடன் தங்களது தந்தையைப் பற்றிச் சொல்ல, சுவாரஸ்யமாய்போன அந்த நிகழ்வில், எதிரே அமர்ந்திருந்த அப்பாவைப் பார்த்து அவரது மகள் இப்படிச் சொன்னார்.

“எங்க அப்பா பெரிய சொத்து எதும் சம்பாதிக்கல. ஆனா, எங்களை அன்பா வளர்த்திருக்காரு. அப்பாவே பெரிய சொத்துதானே!”

தொலைக்காட்சியிலும் அபூர்வமாக இப்படிப்பட்ட உறவின் குரல்கள் இருக்கத்தான் செய்கின்றன.

Comments (0)
Add Comment