பெற்றோர்களை கவனிக்கத் தவறினால் தண்டனையா?

செய்தி:

வயதான தந்தையை கவனிக்காத 3 மகன்களுக்கு சிறை தண்டனை!

– காரைக்கால் சார்பு நீதிபதி உத்தரவு.

கோவிந்த் கமெண்ட்:

காரைக்காலில் எதோ ஒரு குடும்பப் பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு இத்தகைய தண்டனையான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

இதன்படி பார்த்தால் எத்தனை வீடுகளில் நம்மை பெற்றவர்களையும் இன்னும் முதியவர்களையும் எப்படி நடத்திக் கொண்டிருக்கிறோம்?

வீட்டிலேயே எத்தனை பேரை சிறை வைத்திருக்கிறோம் என்பதையெல்லாம் சாதிவாரிக் கணக்கெடுப்பு மாதிரி வீட்டுக்கு வீடு கணக்கெடுத்தால், எவ்வளவு பேருக்கு இந்த தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும்.

பாசம் காட்டுவது தன்னியல்பாக நடக்க வேண்டுமேயொழிய தண்டனை என்கின்ற பயமுறுத்தல் மூலமாக நிகழக் கூடாது.

Comments (0)
Add Comment