போராட்டத்திற்கான முதல் வெற்றியும்; சில எதிர்வினைகளும்!
டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் மொழி, மாநிலப் பாகுபாடுகளைக் கடந்து இந்தியா முழுக்க மாணவர்கள் எழுச்சியுடன் பல நாட்களாகத் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பலனாக, தற்போது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தன் பதவியை விட்டு விலகி இருக்கிறார். அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார். அவர் பதவி விலகியதை அடுத்து இந்தியா முழுக்கப் போராடி வந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்து குதூகலமாக தங்களது முதல் வெற்றியாக அந்த பதவி விலகளைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆனாலும் இதைத் […]
டெல்லியில் நீடிக்கும் போராட்டம்; யார் செவி சாய்ப்பது?
டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பும், டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தின்போது, அதில் கலந்து கொண்ட இளைஞர்கள் மீதும், இளம்பெண்கள் மீதும் காவல்துறையினர் நடத்தியிருக்கும் தாக்குதல்களை சமூக வலைத்தளங்களின் வழியே பார்க்கும்போது பலரும் பதற வேண்டி இருக்கிறது. வித்தியாசமான லத்திகளால் அந்த இளைஞர்களை கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். இளம்பெண்கள் மீது கடுமையான வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. அதில் கலந்து கொண்ட 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களோ, சிறுமிகளோ கூட அந்தத் தாக்குதலுக்கு தப்பவில்லை. இதற்கு முந்திய […]
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு என்ன மதிப்பு?
டெல்லி அரசியலையே களங்க வைக்கும்படி இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. தங்கள் கோரிக்கையை மட்டும் வலியுறுத்தி போராட மாணவர்கள் திறண்ட போது, அவர்களுக்கு துணையாக அங்கு வந்து 20 நாட்களுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரத்தில் இருந்து தன்னுடைய உடலை வருத்திக் கொண்ட சமூக சேவகரான சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்பும், பிரதமர் வீட்டிற்கு அருகேயும் போரட்டத்தை நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறை கடுமையான தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அந்தத் […]
உலகை வியக்க வைத்த மியாசாகி மாம்பழம்!
சங்க இலக்கியங்கள் முதல் காவியங்கள் வரை மாம்பழத்தின் சிறப்புகள் சொல்லோவியமாகத் தீட்டப்பட்டுள்ளன. மாம்பழத்தின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் ஆதி தாயகம் இந்தியா மற்றும் தென் ஆசியப் பகுதிகளாகும்.
புதிய வரலாறு படைக்கும் சோனம் வாங்சுக்!
நீட் தேர்வு தொடங்கி சி.பி.எஸ்.இ தேர்வு வரை மோசடிகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருப்பதால் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. குறுக்கு வழியில் பணம் படைத்தவர்கள் பாஸ் ஆவதற்கு ஆட்சியாளர்களே ஒத்துழைப்பது கொடுமையிலும் கொடுமை! இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி நேர்மையான விசாரணைக்கு உடன்பட வேண்டும் என உண்ணாவிரம் இருந்து கொண்டிருக்கிறார் சோனம் வாங்சுக்! காந்தியவாதியான சோனம் வாங்சுக் அடிப்படையில் ஒரு பொறியாளர். இராணுவத்தில் பணியாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக லடாக் மக்களின் […]
ராமருக்கு ஏன் இந்த சோதனைகள்?
செய்தி: ராமர் கோயிலில் திருடப்பட்ட காணிக்கைகளை மீட்க தீவிரம்! – குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்கள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்க உ.பி. அரசு முடிவு. கோவிந்த் கமெண்ட்: ராமாயணத்தில்தான் ராமனுக்கு வில்லன்கள் இருந்தனர். தற்போது பார்த்தால், ராமர் கோவிலுக்கு உள்ளேயே புது வில்லன்கள் உருவாகி, அதுவும் கோவில் வளாகத்துக்குள்ளேயே கொள்ளை அடித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.