போராட்டத்திற்கான முதல் வெற்றியும்; சில எதிர்வினைகளும்!

டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் மொழி, மாநிலப் பாகுபாடுகளைக் கடந்து இந்தியா முழுக்க மாணவர்கள் எழுச்சியுடன் பல நாட்களாகத் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் பலனாக, தற்போது மத்திய கல்வி அமைச்சரான தர்மேந்திர பிரதான் தன் பதவியை விட்டு விலகி இருக்கிறார்.

அதற்கான காரணத்தையும் தெரிவித்திருக்கிறார்.

அவர் பதவி விலகியதை அடுத்து இந்தியா முழுக்கப் போராடி வந்த மாணவர்கள் உற்சாகம் அடைந்து குதூகலமாக தங்களது முதல் வெற்றியாக அந்த பதவி விலகளைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

ஆனாலும் இதைத் தொடர்ந்து போராட்டம் அடுத்த கட்டத்திற்கு  முன்னெடுக்கப்படும் என்றும் மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்துவோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

இதில்தான் பிரச்சனையே இருக்கிறது.

பல்வேறு விதமான கடுமையான தாக்குதல்களை மாணவர் மீது நடத்தி சில பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு தற்போது மாணவர்கள் முன்வைத்த முதல் கோரிக்கையான தர்மேந்திர பிரதானின் பதவி விலகளை செயல்படுத்திய மத்திய அரசு, தொடர்ந்து அவர்கள் முன்வைக்கும் ஏனைய கோரிக்கைகளை இதேவிதமான கவனத்துடன் பரிசீலிக்குமா என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.

வெவ்வேறு கோரிக்கைகளை ஒரே நேரத்தில் முன்வைத்தால் எத்தகைய நெருக்கடியை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு தமிழகத்தில் மெரினா கடற்கரையே இன்றும் சாட்சியாக இருக்கிறது.

ஆக, போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் வெற்றியைக் கொண்டாடும் அதே நேரத்தில், எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

– ச. அனிதா

Comments (0)
Add Comment