யாரைத்தான் நம்புவதோ வாக்காளர் நெஞ்சம்!

விரைவில் நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிட்டது. தமிழக வாக்காளப் பெருமக்கள் அளிக்கும் வாக்கின் மதிப்பும் கூடிவிட்டது.

ஏற்கனவே திமுக ஆட்சியில், ஒரு கோடியே 37 லட்சம் பேருக்கு வங்கிக்கணக்கில் 5000 ரூபாய் கோடைகால சிறப்புத்தொகை உட்பட வரவு வைக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து அதிமுக சும்மா இருக்குமா? இப்போது அவர்களும் ஆட்சிக்கு வந்ததும் 10,000 ரூபாய் ஒவ்வொரு வாக்காளர் கணக்கிலும் கருணைத் தொகையாக அறிவித்து விமர்சனங்களுக்குப் பிறகு அதை உதவித்தொகையாக அறிவித்திருக்கிறார்.

இதற்குப் பிறகும் தேர்தல் காலத்தில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சிகளின் சார்பில், வெவ்வேறு சதவீத அளவில் பணம் நேரடியாகக் கொடுக்கப்படும் என்கிற அளவுக்கு வாக்காளர்களின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

இதுமட்டுமல்ல, வாக்காளர்களுக்கான வாக்குறுதிகளும் முன்பிருந்ததை விடை அதிகரிக்கலாம், மறுபடியும் ஸ்கூட்டிகள், தையல் இயந்திரங்கள் என்று பல்வேறுவிதமான குஷியான அறிவிப்புகள் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டை மீறி கூட அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

ஆனால் ஒன்று, தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைப் போலவே தற்போதைய காலகட்டத்தில் வாக்குச்சீட்டின் மதிப்பும் உயர்ந்து கொண்டிருக்கிறது என்பது தேர்தல் காலத்து எதார்த்தமாக இருக்கிறது.

இந்த சமயத்தில் வாக்கின் மதிப்பு உயர்ந்திருக்கிறது, அதே சமயம் வாக்காளரின் மதிப்பு உயர்ந்திருக்கிறதா?

#தமிழ்நாடுசட்டமன்றத்தேர்தல் #TNAssemblyElection #திமுக #DMK #கோடைகாலசிறப்புத்தொகை #கருணைத்தொகை #உதவித்தொகை #வாக்காளர் #Voters #வாக்குச்சீட்டு #BallotPaper #உச்சநீதிமன்றம் #SupremeCourt #ElectionNews #TNPolitics #IndianDemocracy

 
 
You might also like