செய்தி:
தேர்தலின் போது பணப் பட்டுவாடா தடுக்கப்படும்.
– தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பேட்டி.
கோவிந்த் கமெண்ட்:
ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையர் வழக்கமாகச் சொல்வதையே, இப்போதும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்லியிருக்கிறார்.
ஆனால், இதைப்போல தேர்தல் ஆணையர் சொல்வதை எல்லாம் மீறி பணப் பட்டுவாடா அல்லது பொருள் பட்டுவாடா நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த முறையும் கடைசி நேரத்தில் பணப்பட்டுவாடா இருக்கலாம் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது.
கொடுக்க கட்சிகள் இருக்கும்போது, வாங்குவதற்கு வாக்காளர்கள் இருக்கும்போது சட்டென்று தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை நிறுத்தி விட முடியுமா?