விதவை மறுமணம் பற்றி நுட்பமாக யோசித்த மக்கள் திலகம்!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவர் எம்.ஜி.ஆரிடம் வந்து, “விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா?

மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே” என்று கேட்டுள்ளார்.

அதற்கு எம்.ஜி.ஆர் அளித்த பதில் மிகவும் நுட்பமானது. “அந்த விதவைப் பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறுமணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டுப் போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூறியதும் கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றுள்ளார்.

நன்றி: முகநூல் பதிவு

You might also like