கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட  தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1951ம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, எந்த நபரும் வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகின்ற 48 மணி நேர கால அளவில் ஏதேனும் கருத்துக் கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உட்பட, எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும், எந்தவித மின்னணு ஊடகத்தில் காட்சிப்படுத்துவது தடை செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

You might also like