– குஜராத்தில் விறுவிறுப்படைந்துள்ள தேர்தல் களம்
குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்த மாநில மக்களுக்கு எதிராக பாஜக செய்துள்ள 22 குற்றங்களை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. குஜராத் மக்கள் பசி மற்றும் பயத்தில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் 135 பேர் உயிரிழப்புக்கு காரணமான மோர்பி தொங்கு பால விபத்து குறித்தும் அந்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்று பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக மீது காங்கிரஸ் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மீது காங்கிரஸ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.