கருத்துக் கணிப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்!

– தலைமைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த மாதம் 15-ம் தேதி ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். பதவியேற்ற சில நாள்களிலேயே, தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அனுப்பியிருந்தார்.

அதில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரைகளின்மீது ஒன்றிய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம் மீண்டும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை, ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்கிறது.

அதில், ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளது.

அதோடு, தேர்தல் நடைபெறவிருக்கும் இடங்களில் தேதி அறிவித்த பின்னர், அனைத்துக் கட்டங்களிலும் கருத்துக் கணிப்புகளை நடத்துவதற்கும், அவற்றை வெளியிடுவதற்கும் கட்டுப்பாடுகள் வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.

You might also like