இன்று (16.04.2022) சித்ரா பௌர்ணமி.
தமிழகம் மற்றும் கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கண்ணகி கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி விழாவில் கலந்துகொள்ள முதலில் 1982-83ல் சென்றதுண்டு. இதில் தமிழகத்தின் உரிமையை மீட்க அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
கோவலனால் கண்ணகி பூந்தேரில் விண்ணுவுலக்கிற்கு அழைத்து செல்லப்பட்ட இடம் இந்த கண்ணகி கோவில்.
இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது.
தமிழக எல்லையில் கூடலூர் பளியன்குடியிலிருந்து 6.6 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் கடல்மட்டத்திலிருந்து 4380 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் கடந்த 1800 ஆண்டுகளாக சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மங்கலதேவி கண்ணகி கோவில் – கோட்டம் செல்லும் வழி
கம்பம் – குமுளி வரை வாகனத்தில் வந்து, ஜீப் மூலம் கண்ணகி கோவிலுக்கு வரலாம்.
நடந்து வருபவர்கள் கம்பம்-கூடலூர்-லோயர் கேம்ப் அருகில் இருக்கும் பளியன்குடி வரை வாகனத்தில் வரலாம்.
பளியன்குடியில் இருந்து கண்ணகி கோவில் வரை மலைப் பகுதியில் 6.6 கி.மீ. மலைப்பாதையில் நடந்து கோவிலை அடையலாம்.
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்