5 மாநிலத் தேர்தல் முடிவுகள் வலியுறுத்தும் உண்மை!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மீண்டும் மீண்டும் ஒரு  உண்மையை வலியுறுத்துகிறது.

பல ஆண்டுகளாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறிப்போனதும், அதற்கு காங்கிரசு தலைமை மற்றும் உட்கட்சி பூசலும் கோஷ்டி கானமும் வெகுவான காரணங்கள் என்பதும், ஏனைய பிற
கட்சிகளின் கணிசமான செல்வாக்கினால் மக்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்பதுமே இன்றியமையாத காரணிகளாகும்.

தென் இந்தியாவில், மேற்கு வங்கத்தில் இந்த நிலைமை வேறு. இந்த மாநிலங்களில் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கு மற்றும் மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளதால் கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் பாஜக செல்வாக்கு பெற இயலவில்லை.

விலைக்கு வாங்கப்பட்ட குவைசி, மாயாவதி போன்றவர்கள் தங்களது வாக்கு வங்கி மூலம் வாக்குகளைப் பிரித்து விட்டதால் தற்போதைய ஆளும் கட்சி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பல இடங்களில் வெற்றி பெற்று விட்டது.

காங்கிரசு கட்சியின் உட்கட்சி பூசலால் பலியாகி வந்த மாநிலங்கள் வரிசையில் பஞ்சாப் இடம் பெற்று விட்டது.

தேர்தல் அரசியலில் ஒரு கட்சியின் வெற்றி மக்கள் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கும். அதன் சாதக பாதகங்கள் எல்லா தரப்பு மக்களை பாதிக்கும்.

வகுப்புவாத சக்திகள் வளர்வது இந்தியாவின் ஜனநாயகத்தின் மாண்புகளை சிதைத்துவிடும்.

ஏற்கனவே அதன் கொடுமைகளை மற்றும் குரூரமான மக்கள் விரோத நடவடிக்கைகளை பல்வேறு சட்டங்கள் மூலம் அமுல் படுத்த முனைப்புடன் ஒன்றிய அரசு செயல்பட்டது அறிந்த ஒன்று.

முற்போக்கு அரசியல் சக்திகள் இதை உணர்ந்துள்ளார்கள்.

எனினும் வாக்களிக்கும் மக்கள் 60 முதல் 70 சதவீதம் வரையில் மட்டுமே உள்ளனர். அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மதவெறி மற்றும் பெரும்பான்மை மயக்கத்தில் மூழகடிப்பட்டுள்ளார்கள். மற்ற அரசியல் கட்சிகளின் வாக்குகள் பிரிந்துள்ளது.

இந்த நிலை மாற வேண்டும் என்றால், அதற்கான உழைப்பு மிகவும் அவசியம்.

இதற்கான உத்வேகம் மற்றும் முயற்சிகள் வெகுவாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி அரசியல் மட்டுமே இந்தியாவின் மக்கள் நலன், மதச்சார்பின்மை, சமூகநீதி, மாநில உரிமை போன்ற பன்மையில் ஒருமை பேணும் நாடாக நிகழ்வதற்கு வழி வகுக்கும். இதை உணர்ந்து செயல்படுவோம்.

– நன்றி: பாலு முகநூல் பதிவு

You might also like