எந்தச் சொத்தையும் அரசுவுடமை ஆக்கலாமா?

தேர்தல் பக்கங்கள்:

தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு முன்னிருக்கிற சில கேள்விகள்:

  1. சட்டமன்றத் தேர்தலில் நெருங்கிவிட்டதை உணர்ந்ததும். கடன் தள்ளுபடி என்ன, சில சலுகைகள் என்ன – என்று வழங்குகிறவர்கள் தமிழகத்தில் இவ்வளவு காலம் ஆட்சி நடத்திய போது ஏன் இந்தத் தீவிரம் காட்டவில்லை?
  1. விளம்பரங்களுக்குக் குறைவே இல்லை, அவ்வளவு விளம்பரங்கள் வருகின்றன ஊடகங்களில். அரசின் செலவில் ஏன் இவ்வளவு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன? செய்ததை விடச் செய்ததாகச் சொல்லிக் காண்பிப்பது தானே அதிகமாக இருக்கிறது?
  1. ஜல்லிக்கட்டு நாயகன் என்றெல்லாம் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸூக்குத் தனி விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. அது சரி, அவரை ஏன் ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைக்கிறீர்கள்? ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தார் ஓ.பி.எஸ்? தமிழகம் முழுக்க மெரீனா உள்ளிட்ட பல இடங்களில் இளைஞர்கள் போராடி அவர்கள் மீது கடும் தாக்குதல் நடந்தபோது, டெல்லியில் இருந்த ஓ.பி.எஸ் தனக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்று சொன்னாரே தவிர, அவர் என்ன செய்தார்? நடந்த தாக்குதலை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கையாவது உடனடியாக வெளிவருமா? வந்தால், தெரிந்து விடும் – ஓ.பி.எஸ் யாருக்காகப் பாடுபட்டிருக்கிறார் என்பது.
  1. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது இன்னும் சிலர் ஆதாரபூர்வமாகச் சில சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அலட்சியப் படுத்தப்படுகிறார்களே தவிர, அவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதில்லை. ஜனநாயக முறையின் அடிப்படையான அம்சம் வாக்கு இயந்திரம். அதைப் பற்றிய சந்தேகமே வலுவடைந்து வருகிறது என்றால் பொறுமையாக நிவர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை இல்லையா?
  1. தேர்தல் துவங்குவதற்கு முன்பே சுமார் ஏழாயிரம் வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப் பட்டிருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே பாதுகாப்புப்படை எல்லாம் வந்திறங்கி விட்டது. இன்னும் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டியது ஒன்று தான் பாக்கி. அதற்குள் இவ்வளவு அவசர அவசரமாகவா ரோடு போடுவார்கள்? அதே அவசரத்துடனா டெண்டர்கள் விடுவார்கள்? மேடைகளில் பரப்புரைகளில் இவ்வளவு தரம் தாழ்ந்தா பேசுவார்கள்?
  1. அண்மையில் சிலருடைய சொத்துகளைக் கைப்பற்றி அரசுடமை ஆக்குவதாக அறிவித்தார்கள். அதே மாதிரி ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இவர்களுடைய சொத்துக்கணக்கு கணக்கிடப்பட்டு இவர்களின் சொத்துக்கள் கைபற்றப்பட்டால், அவற்றையும் அரசுடமை ஆக்கச் சம்மதிப்பார்களா? ஆனாலும்  அதிலும் அடுத்து வர இருக்கிற அரசுக்கு எப்படியோ வழிகாட்டியிருக்கிறார்கள்.

– யூகி

26.02.2021 01 : 56 P.M

You might also like