எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு!

  • திடமான உறுதி வேண்டும். அப்போதுதான் சாதனைகளில் ஈடுபட முடியும். உறுதியுடன் கூடிய ஈடுபாடு மிக அவசியம்.
  • உலக வாழ்க்கைக்குப் பணத்தின் உதவி அவசியந்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதைப் பற்றியே வெகுவாகச் சிந்தித்துக் கொண்டிராதே. தானே கிடைக்கக் கூடியதைக் கொண்டு திருப்தியடைவதே மேலான குணம்.
  • எப்பொழுதும், இனி எப்படி போகப் போகிறோம் என்று அச்சப்படுவதைவிட, இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார். உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
  • அனுபவத்தை விட பெரிய ஆசிரியர் வேறு யாருமில்லை. அது முதலில் சோதனையைக் கொடுத்துவிட்டு பிறகுதான் பாடத்தை போதிக்கும்.
  • வெளியே பார்த்தால் எங்கே போகிறோம் என்று உனக்கு புரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான் முடியும். ஆனால் உள்ளத்தால் தான் வழியைக் காட்ட முடியும்.
  • துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்?” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்தக் கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான் வியக்கிறேன்.
  • உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில் சிறந்தவைகளை பெற கடைபிடிக்க வேண்டிய நியதி.
  • கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. அச்சத்தை விடு. நம்பிக்கைக் கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்பட வேண்டிய ஒரு புதிர் தானே தவிர பிரச்சனை அல்ல.
  • எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்துகொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும்.
  • இறைவனிடம் அன்பு பிறந்தால், வயலில் தேங்கி நிற்கும் தண்ணீர் சூரியனுடைய வெப்பத்தினால் வற்றிவிடுவதுபோல் பாவம், தாபம் எல்லாம் பறந்தோடி விடுகின்றன.
  • பிறருடைய குறைகளைப் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். பயனுள்ள செயல்களில் மட்டும் ஈடுபடுங்கள்.
  • எண்ணத்திற்கு ஏற்பவே பலன் இருக்கும்; அந்த நம்பிக்கைதான் மூலதனம். நம்பிக்கை வந்துவிட்டால் பிறகு பயம் இல்லை.

15.02.2021 12 : 20 P.M

You might also like