‘செந்தமிழ் விறலி’…!
அருமை நிழல் : கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் துணைவியார் டி.ஏ.மதுரத்திற்கு, விழுப்புரம் தமிழ்ச் சங்கம் சார்பில் 1956-ம் ஆண்டு ‘செந்தமிழ் விறலி’ பட்டம் வழங்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுரத்துடன் அவரது மகன் என்.எஸ்.கே.சண்முகம் (திரைப்பட பாடகி என்.எஸ்.கே.ரம்யாவின் தந்தை) நன்றி : என்.எஸ்.கே.நல்லதம்பி முகநூல் பதிவு. #என்_எஸ்_கே. #கலைவாணர் #என்_எஸ்_கிருஷ்ணன் #டி_ஏ_மதுரம் #என்_எஸ்_கே_சண்முகம் #n_s_k_kalaivanar #ns_krishnan #ta_maduram #nsk #shanmugam
அசல் கிராமத்தானைக் கண் முன் கொண்டு வந்த சிவாஜி!
அருமை நிழல்: மதுரை மண் சார்ந்த மாந்தர்களின் வாழ்வியலை ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்திய கருப்பு வெள்ளை காவியம்தான், நடிகர் திலகம், பி.மாதவன், பாலமுருகன் கூட்டணியில் உருவான ‘பட்டிக்காடா பட்டணமா’. படத்தின் பாட்டுடைத் தலைவன் மூக்கையாவாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அள்ளி முடித்த கொண்டை முடியும் கடுக்கணும் அணிந்து அசல் சோழவந்தான் கிராமத்தானின் உடல்மொழியை நேர்த்தியாகக் காட்சிப்படுத்தியிருப்பார். மாரியம்மன் கோவிலுக்கு தீச்சட்டி எடுப்பதிலிருந்து வேட்டியை வரிந்து கட்டி சிலம்பு சுற்றுவதிலிருந்து பஞ்சாயத்து தலைவராக தீர்ப்பு சொல்லும் இடத்திலும் கம்பீரமான […]
கட்சி நிதியில் காஃப்பிக் கூட சாப்பிடக்கூடாது என்று வாழ்ந்த தோழர்!
ஒருமுறை மதுரை கட்சிக் கூட்டத்தில் பேசிவிட்டு அதிகாலையில் கோயம்புத்தூர் வந்த ஜீவா பசியில் ரயில் நிலைய இருக்கையில் தூங்கி விடுகிறார். ஜீவாவை தோழர்கள் வந்து எழுப்புகிறார்கள். பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க என்கிறார் ஜீவா. – இங்கயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர். – சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல. தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு வர, அதை சாப்பிட்டுவிட்டு தான் கொண்டுவந்த மூட்டையை எடுத்துக்கொண்டு ஜீவா கிளம்புகிறார். கொடுங்க தோழர், அதை நான் […]
மக்கள் மொழியே மருதகாசியின் வழி!
மருதகாசியின் வரிகள் பொய்யாகிவிடாதபடி உழவுத் தொழிலைக் காப்பாற்ற வேண்டும். விளை நிலங்களைத் தொழிற்சாலைகளுக்கு கொடுத்துவிடக் கூடாது.
டார்வின்: படைப்புக் கோட்பாட்டை நிராகரித்த பரிணாமக் கோட்பாட்டாளர்!
எதைப் பார்க்கிறோமோ அதன் உண்மையை ஆராய வேண்டும். புரியவில்லை என்றால் அதை இன்னும் நெருக்கமாகச் சென்று ஆராய்வதற்குத் தேவையான பொறுமை வேண்டும். கண்டறிந்ததைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிவு வேண்டும். இவை மூன்றும் இருந்தால் போதும், நாம் என்னவாக நினைக்கிறோமோ அதைப் பெற முடியும். இங்கிலாந்தில் பிறந்த சார்லஸ் டார்வின்தான் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்தை முன்வைத்தார். அது மத நம்பிக்கையின் ஆணி வேரையே அசைக்கும் என்று தெரியும். ஆனால், தான் உண்மை […]
தனக்கென தனி ட்ரேட்மார்க் செட் செய்த சி.கே.சரஸ்வதி!
அருமை நிழல்: தமிழ் சினிமாவில் காலகட்டத்திற்கு ஏற்றவாறு அட்வான்ஸ்ட் வில்லிகளாக பலர் வலம் வந்தாலும், அவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் தீய எண்ணம் கொண்ட வில்லத்தனமான கதாபாத்திரங்களிலேயே நடித்து அக்கால ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி ட்ரேட்மார்க் செட் செய்தவர் நடிகை சி.கே. சரஸ்வதி. விழிகளை உருட்டி மிரட்டும் பார்வையால் வில்லத்தனமான சிரிப்பை முகத்தில் காட்டி கோபத்தையும், கொடூரத்தையும் கொந்தளிக்கும் முகபாவனைகள் என தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வெறுப்படைய வைக்கும் அளவுக்கு […]