தனித்தன்மை வாய்ந்த அழகி சாய் பல்லவி!
தமிழ் சினிமா ரசிகர்கள் மொழி, வட்டார, பிராந்திய வேறுபாடுகள் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. வெளி மாநிலங்களைச் சேர்ந்த வேற்றுமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பலர் தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டி ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்றுள்ளனர். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் இங்கு சோடைபோனதில்லை. ஆனால், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தமிழரான சாய் பல்லவி தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் புகழை அடைந்தது ‘பிரேமம்’ என்னும் மலையாளப் படம் வழியாகத்தான். ‘பிரேமம்’ படத்தின் மலர் டீச்சராக தென்னிந்திய நெஞ்சங்களைக் […]
சிம்புவை அணு அணுவாகச் செதுக்கிய டி.ராஜேந்தர்!
அருமை நிழல்: சிம்பு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகனாக வலம் வருகின்றார். சிறு வயதில் தன் தந்தை டி.ராஜேந்தர் இயக்கும் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தார் சிம்பு. மிகப்பெரிய நடிகராக வளர முக்கியக் காரணம், அவரின் தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தான். சிறு வயது முதல் சிம்புவிற்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது டி.ராஜேந்தர் தான். டி.ராஜேந்தர் தயாரித்த தாய் தங்கை பாசம், ஒரு வசந்த கீதம், என் தங்கை கல்யாணி மற்றும் […]
தமிழ் திரையுலகின் ஆல்ரவுண்டர் டி.ராஜேந்தர்!
80 காலகட்ட தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைக்கதையின் மூலம் ஒரு ட்ரெண்டை உருவாக்கியவர் டி ராஜேந்தர். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களை வைத்துதான் படங்களை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை உடைத்து காட்டிய பெருமை இவருக்கு உண்டு. புதுமுகங்களை வைத்து எதார்த்தமான கதையை மக்கள் விரும்பும் வகையில் கொடுத்து தன் திரைபயணத்தை ஆரம்பித்த இவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாட்டுக்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி சக்கை போடு […]
சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!
உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.
இனி ஒரு கர்ப்பிணியையும் சாகவிடமாட்டேன்…!
அவள் பெயர் ஐடா ஸ்கேடர் (Dr.Ida Sophia Scudder): அமெரிக்கப் பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள். ஆனால் மிஷனரிகள். அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்களுக்கு சேவை செய்ய வந்த பலரில் இவர்களும் அடங்குவர். அப்படித்தான் 14 வயது நிரம்பிய ஐடாவும் இந்தியா வந்தாள், வந்த இருமாதங்களில் அவளின் அன்னை அமெரிக்கா திரும்பிவிட்டார். தந்தையுடன் வேலூரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தாள் அந்த சிறுமி. அந்த இரு சம்பவங்களும் அவளை புரட்டிப் போட்டன என்ன சம்பவம்? அந்த நள்ளிரவில் […]
கொல்கத்தாவில் விருது: எஸ்.ரா தமிழில் ஏற்புரை!
பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக கொல்கத்தா சென்றுவந்த அனுபவத்தைத் தனது இணையதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அந்தப் பதிவிலிருந்து… “பாரதிய பாஷா பரிஷத் விருது பெறுவதற்காக எனது மனைவியுடன் ஏப்ரல் 30 மாலை கொல்கத்தாவிற்குச் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நான் தங்குவதற்காக அறை ஒதுக்கப்பட்டிருந்த ‘மீரா இன்’ போவதற்கு ஒன்றரை மணி நேரமானது. கடுமையான வாகன நெருக்கடி. இதற்கு முன்பாக கொல்கத்தாவிற்கு நான்கு முறை சென்றிருக்கிறேன். அதே குப்பையும் தூசியும் அழுக்கும் படிந்த நிலை. […]