மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்!

இன்றைய நச்:  மனம் தன் செயல்பாட்டைப் புரிந்து கொள்ளாதவரை அது மேலும் மேலும் துன்பத்தை உருவாக்கும்; மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்! – ஜே.கிருஷ்ணமூர்த்தி

இளம் படைப்பாளிகளை கைகுலுக்கி வரவேற்கும் பவா!

தன்னை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் படைப்பாளிகளின் மத்தியில் பவா முற்றிலும் வேறுபட்டவர். நல்ல இலக்கிய பிரதிகளை, நல்ல படைப்புகளை, அதன் படைப்பாளிகளை தான் போகுமிடமெல்லாம், காணும் மனிதரிடமெல்லாம் சிலாகித்துச் சொல்பவர். அவர் ஒரு போதும் தன்னுடைய படைப்புகளை எந்த இடத்திலும் முன்னிறுத்தியதில்லை. இன்றைய காலகட்டத்தில் நல்ல கதைகளோடு எந்த இளம் படைப்பாளி வந்தாலும் கைக்குலுக்கி வரவேற்பவர். தொடர்ந்து அவர்களை எழுத உற்சாகப்படுத்துபவர். எனது படைப்புகளும், சிறுகதைகளும் இவ்வளவு பெரிய வாசகப் பரப்பை அடைந்ததற்கு பவா தான் மிக […]

ஹீரோவில் இருந்து ’வில்லன்’!

சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் கடந்த வாரம் முதல் இணையத்தில் உலா வருகிறது. அந்தப் படம் குறித்து முறையான அறிவிப்பு வெளிவராத நிலையில், ‘வலைப்பேச்சு’ உள்ளிட்ட சில யூடியூப் தளங்களில் அது வெளியானது. ‘ஜெயம் ரவி வில்லனா’ என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சாதாரணமாகப் படம் பார்க்கிறவர்களும் கூட ‘ஞே’ என்று முழிக்கிற வகையிலான தகவல்தான் அது. எந்தளவுக்கு அதில் உண்மை இருக்கிறது என்பது இன்னும் […]

பெண் அன்றும் இன்றும்!

தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு. பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள் மிகச் சில. இந்நூல்கள் ’பெண்’ என்ற பாலினத்தின் அடிப்படையில் சமூகம் இழைக்கும் ஒடுக்குமுறைகளையும், பாகுபாடுகளையும் சுட்டிக்காட்டி விவாதிக்கின்றன. இவ்வாறான நூல்கள் வரவேற்கத்தக்கதே. ஆனால், பெண், தொழிலாளி, பெண் விவசாயி போன்ற பதங்களை தமிழ் எழுத்துலகில் பார்ப்பது அரிதினும் அரிதாக உள்ளது. அவ்வகையில் […]

ஃபெஞ்சல் புயல்: மக்கள் துயரை யார் அறிவார்?

‘தாய்’ தலையங்கம்! தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமான வீச்சோடு பலவிதமான புயல்கள் கடந்து போயிருக்கின்றன. 2015-ம் ஆண்டு புயல் ஏற்படுத்திய பாதிப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில், குறிப்பாக வடதமிழகத்தில் அதிக பாதிப்புகளை உருவாக்கிக் கடந்து போயிருக்கிறது ஃபெஞ்சல் புயல். புயல் வருவதற்கு முன்பே புயல் குறித்த வானிலை மையத்தின் அறிக்கையும், தனியார் வானிலை கணிப்பாளர்களின் அறிக்கையும் மாறுபட்டிருந்தன. முதலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று அறிவித்தார்கள், அது புயலாக மாறாது என்று அறிவித்தார்கள். பிறகு சட்டென்று […]

கவியரசர் கண்ணதாசனின் அபாரத் திறமை!

கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது. *** “அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன். அதனால் இவன் ஒருவனை கடத்தினால் வீடு அமைதியாகிவிடும் என்பது அப்பாவின் கணிப்பு, ஆகவே பாட்டு எழுதப்போகும் போது “நீ வந்து வண்டியில் ஏறு” என்று சொல்லி என்னையும் பாடல் எழுதும் இடங்களுக்கு அழைத்துப் போய்விடுவார். இது அவரைப் பற்றி அறிந்து கொள்ள […]