எனக்காக எழுதிய பாடல்தான் “ஆடைகட்டி வந்த நிலவு!”
பட்டுக்கோட்டையார் மனைவி கௌரவம்மாள் பகிர்ந்த நினைவுகள்: எனக்கு பட்டுக்கோட்டை பக்கத்துல ஆத்திக்கோட்டைதான் சொந்த ஊர். எங்க அண்ணன் சின்னையனும் அவுகளோட அண்ணனும் சிங்கப்பூர்ல வேலை பார்க்கும்போது சிநேகிதமானவங்க. ‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவளுக்கு கல்யாணம் பண்ணணும்’னு எங்க அண்ணன்தான் சொல்லிருக்காக. அப்ப அவுக அண்ணன் ஒண்ணும் சொல்லலையாம். சிங்கப்பூர்லேர்ந்து லீவுல ஊருக்கு வரும்போது, தம்பியைக் கூட்டிட்டு என்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டார். அப்ப அவுக, ’அண்ணனுக்குதான் பொண்ணு பார்க்கப் போறோம்’னு நினைச்சுக்கிட்டு வந்தாகளாம். பொண்ணு பார்த்துட்டு […]
அபூர்வமாய் ஒன்றிணைந்த அன்றைய நட்சத்திரங்கள்!
அருமை நிழல்: விழா ஒன்றில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர்கள் ஜெமினி கணேசனும் ஜெய்சங்கரும் எடுத்துக்கொண்ட புகைப்படம். இந்த மூன்று பேரும் ஒன்றிணைந்து நடித்ததில்லை. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் சேர்ந்து நடித்த ஒரே படம் ‘முகராசி’. ஜெய்சங்கர், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, கால்ஷீட் பிரச்சனையால் பின்னர் முத்துராமன் அந்தப் படத்தில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் முதலில் என்னை பி.ஆர்.ஓ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர்!
1958 ல் ‘நாடோடி மன்னன்’ படத்திற்கு நான் மக்கள் தொடர்பாளராக ஆனேன். அதற்கு முன்பு பி.ஆர்.ஓ. என்ற ஒன்றில்லை. நான் தான் முதல் நபர். அப்படி வந்தது ஓர் சுவாரசியமான கதை. நடிகர் சங்கம் ‘நடிகன் குரல்’ என்ற பத்திரிகையை நடத்தி வந்தது. யார் நடிகர் சங்கத்தின் தலைவரோ, அவர் தான் அந்த இதழின் வெளியீட்டாளராக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தான் அப்போது நடிகர் சங்கத் தலைவர். அவர் தான் பப்ளிஷரும். அந்தப் பத்திரிகைக்கு வித்வான் வே.லெட்சுமணன் […]
இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார் நம்மிடையே!
1965-ம் ஆண்டில் ஒரு நாள்… திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின், நீண்ட திண்ணையில், நடந்து வந்து கொண்டிருந்தார். புகழ்பெற்ற மக்கள் மருத்துவர், டாக்டர். பி.கே.ஆர் வாரியார் அவர்கள் அப்போது, நோயாளிகளுக்கிடையே, ஒரு நடுத்தர வயது தம்பதியர் இருப்பதை கவனித்தார் டாக்டர் வாரியார். தனது கண்களை நம்ப முடியவில்லை அவரால், மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார். ஆமாம், அவர்கள் வேறு யாரும் இல்லை. டாக்டர் வாரியார் அவர்கள் சந்தேகப்பட்டது சரியே. அங்கே… அந்தத் திண்ணையில் இருந்தவர்கள், மார்க்சீய அறிஞரும், உலக வரலாற்றில், […]
இசைமயமான ஒரு தருணம்!
அருமை நிழல்: இசை இரட்டையர்களாகத் திகழ்ந்த விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சிம்பொனி மாஸ்ட்ரோ இளையராஜா, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் – நால்வரும் இணைந்து எடுத்த அபூர்வ ராகத்தைப் போன்ற புகைப்படம்!
என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான்!
“என்னுடைய முதல் ஆசிரியர் என் அம்மாதான். எல்லோருக்குமே முதல் ஆசிரியர், பெற்றோர்தான் என்கிற பொருளில் சொல்லவில்லை. உண்மையிலேயே எனக்கு முதன்முதலில் ‘அனா ஆவன்னா…’ சொல்லிக் கொடுத்தது என் அம்மாதான். அனா, ஆவன்னா மட்டுமல்ல… ஐந்தாம் வகுப்பு வரை அம்மாதான் எனக்கு ஆசிரியர். என் வீடுதான் என் பள்ளிக்கூடம். சக மாணவர்கள் யாரும் கிடையாது. அப்போது நாங்கள் ஒரத்தநாடு தாலுகாவில் பாப்பாநாடு – மதுக்கூர் சாலையில் உள்ள குத்தகைக்காடு எனும் ஒரு குக்கிராமத்தில் வசித்து வந்தோம். அப்பா நாடுகடத்தப்பட்டு, […]