சிறைக்குள்ளும் தடுக்க முடியவில்லையா?
செய்தி: புழல் சிறையில் செல்போன், கஞ்சா, சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல். கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாடு முதல்வர் அடிக்கடி போதைப் பொருட்களைத் தடுக்கக் கோரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தாலும், போதைத் தடுப்புப் பிரிவு சுறுசுறுப்பாக செயல்படுவதாக சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் பல பகுதிகளில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கிறது. கஞ்சா வியாபாரிகளால் தாக்கப்பட்டு அண்மையில் காவல்துறை அதிகாரி உயிரிழந்திருக்கிறார். சென்னை மாதிரி நகர்ப்புறங்களிலேயே கல்விக் கூடங்களுக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது குறித்த செய்திகள் […]
‘நா’ இருப்போரெல்லாம் ‘நா’காக்க!
அண்மைக்கால ஊடகச் செய்திகளைப் பார்க்கும்போது, காது இருப்பவர்களுக்கெல்லாம், காது இருப்பதே பெரும் வேதனையாக இருக்கிறது. அந்த அளவுக்கு நம்மைச் சுற்றிலும் செமத்தியான பேச்சுக்கள் எங்கு பார்த்தாலும், பரவிக் கொண்டிருக்கின்றன. குளிர்காலத்தில், பலருக்கு பெட்சீட்டெல்லாம் போர்த்தாத போதே உடம்பெல்லாம் வெட வெடக்கிற மாதிரி தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பொதுவெளியில் பேசும் பலர், நாக்கில் சுளுக்கு விழும் அளவிற்கு பேசிவிட்டு அவை பொதுவெளியில், போதுமான அளவிற்கு பீதியைக் கிளப்பிய பிறகு, சாவகாசமாக பிறகு மன்னிப்பு அறிக்கையை விடுக்கிறார்கள். மூத்த அமைச்சர்கள் […]
தமிழ்ப் புத்தாண்டில் ஏம்ப்பா இப்படி புதுப்புதுப் பூச்சாண்டிகள்?
பொதுவாக புத்தாண்டு பிறக்கும் சமயங்களிலெல்லாம் ஜோதிடர்கள் சொல்லி வைத்ததைப் போல, வரும் ஆண்டுக்கான பலாபலன்களைப் பற்றி விவரித்துப் பேச, தொலைக்காட்சிகளுக்கு முன்னால், வெவ்வேறு ராசிக்காரர்கள் விரைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோதாதென்று அண்மையில், ராமேஸ்வரம் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விசேஷ பஞ்சாங்கத்தை வாசித்திருக்கிறார்கள். அதில், இரண்டு வெடிகுண்டுகளைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். ஒன்று, ஏற்கனவே தமிழ்நாட்டில் சில பல மாதங்களுக்கு முன்பு மழை பெருமளவில் பெய்து படாதபாடு படுத்தியபோதும், மத்திய அரசு கொஞ்சம் கூட நிவாரண நிதி அளிக்காமல் […]
மாநில உரிமைகளை மீட்டெடுக்கக் குழு!
“என்னால் ஆனதை நான் செய்துவிட்டேன். இனி டெல்லி தன்னால் ஆனதைப் பார்க்கட்டும்” – தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1968-ம் ஆண்டு இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றி, இந்தித் திணிப்புக்கு இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய முதலமைச்சர் அண்ணா, அதன்பின் சென்னையில் நடைபெற்ற கழகக் கூட்டத்தில் துணிச்சலோடு முழங்கினார். ஏறத்தாழ 57 ஆண்டுகள் கடந்தும் தமிழ்நாட்டில் அண்ணா நிறைவேற்றிய இருமொழிக் கொள்கை மாறவில்லை. 1969-ல் ராஜமன்னார் தலைமையிலான குழுவை அமைத்து மைய-மாநில உறவுகள் குறித்து அறிக்கையைப் பெற்ற முதலமைச்சர் கலைஞர், […]
ஒலிம்பிக்கில் நடந்த கிரிக்கெட் போட்டி!
1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது பலருக்கும் தெரியாத விஷயம். அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அதுவும் நிலைவையில் இருந்த நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது.