சொர்க்கவாசல் – இது உண்மைக் கதையா?!

சொர்க்கம், நரகம் போன்ற சொல்லாடல்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, வாழ்வில் தொடர்ந்து தமக்கு உவப்பில்லாத அனுபவங்களை எதிர்கொள்கையில் அது போன்றதொரு எண்ண வட்டத்திற்குள் சிக்குவது இயல்பு. தம்மைப் பிடித்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, நல்லதொரு கரையைக் கண்டுவிட மாட்டோமா என்று ஏங்குவது எல்லா மனிதருக்குமானது. அப்படியொரு ஏக்கத்தை மட்டுமே சுமக்கிற மனிதர்களைக் காட்டவல்லவை ‘சிறைப் படங்கள்’. த்ரில்லர், மிஸ்டரி, ஆக்‌ஷன், ட்ராமா, காமெடி, க்ரைம் என்று பல வகைமைகளில் இப்படங்களின் கதைக்களம் பெரும்பாலும் ஒரு சிறைச்சாலையைச் சார்ந்து […]

‘All We Imagine As Light’ – நீரோட்டமாய் ஒரு வாழ்க்கை!

பாயல் கபாடியா இயக்கத்தில் கனி குஸ்ருதி, திவ்யபிரபா, சாயா கடம் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருக்கும் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

சூக்‌ஷ்ம தர்ஷினி – யூகங்களைத் தவிடுபொடியாக்கும் ‘திரைக்கதை’!

மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் பசில் ஜோசப். ஜெய ஜெய ஜெய ஜெயஹே, பேலிமி, பால்து ஜான்வர், குருவாயூர் அம்பலநடையில், நுனக்குழி என்று வெவ்வேறுபட்ட வகைமையில் அமைந்த படங்களில், வெவ்வேறுவிதமான பாத்திரங்களில் தோன்றி நம்மை மகிழ்வித்து வருபவர். அனைத்தையும் மீறி, அவர் முகத்தில் தெரியும் அப்பாவித்தனம் அப்பாத்திரங்களின் ஒரு அம்சமாக அமைந்திருக்கும். அதையே கதைக்கருவின் மையமாக்கி, அவரை வில்லத்தனமாகக் காட்டியது ஜேசி நிதின் இயக்கியுள்ள ‘சூக்‌ஷ்ம தர்ஷினி’ படத்தின் ட்ரெய்லர். சூக்‌ஷ்ம தர்ஷினி […]

எமக்குத் தொழில் ரொமான்ஸ் – அதுல ‘கவனம்’ முக்கியம்!

சில நாயகர்களின் படங்கள் வருகிறது என்றால், கண்களை மூடிக்கொண்டு மனதில் எதிர்பார்ப்புகளை ஏற்றிக் கொள்ளலாம். சமீபகாலமாக அசோக்செல்வன் நடித்துவரும் படங்களின் திரைக்கதைகள் அதற்குத் தக்கவாறு அமைந்தன. அதுவே, பாலாஜி கேசவன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ மீதும் கவனிப்பு விழக் காரணமாக இருந்தது. இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். அவந்திகா மிஸ்ரா, ஊர்வசி, அழகம்பெருமாள், பக்ஸ், படவா கோபி, சோனியா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப, இதில் திகட்டத் திகட்டக் காதல் […]

ஜாலியோ ஜிம்கானா – இன்னொரு ‘மகளிர் மட்டும்’?!

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இப்படம் “இன்னொரு மகளிர் மட்டும் ஆக இருக்குமா” என்ற எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.

நிறங்கள் மூன்று – அப்பாக்களின் பாசக் கதை!

ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜப்பானிய, கொரிய மொழி உட்பட உலகத் திரைப்படங்கள் பலவற்றைப் பார்த்து ரசித்தபிறகு, இதே போன்று தமிழில் ஒரு படம் வந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணம் ரசிகர்களிடத்தில் தோன்றுவது இயல்பு. இயக்குனர் ஒருவர் அப்படிச் சிந்திக்கிறபோது, ரசிகர்களுக்குப் புதுமையான படைப்பொன்று காணக் கிடைக்கும். ஆனால், அந்த எண்ணத்தைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற கதை, அதனைத் தமிழில் சொல்வதற்கு ஏற்ற காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் போன்றவை அதற்குத் தேவை. அந்த வரிசையில், தான் பார்த்து வியந்த […]