பாய்ஸ் கம்பெனிக் காலம்!

பாய்ஸ் கம்பெனிகளில் சேர்ந்து பயிற்சிபெற்ற சிறார் நடிகர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தமிழ் நாடகம் தானாகவே சீர்திருத்தம் அடைந்தது வீழ்ச்சி வளர்ச்சியாக மாறியது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் – ’காதல் நீதானா’ என்றறியும் கதை!

தமிழ் திரையுலகில் மிக பிஸியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி என்று வெவ்வேறு மொழி, வெவ்வேறு வகைமைகளில் அமைந்த படங்களில் நடித்து வருபவர். ரசிகர்களை ஈர்க்கிற வசீகரிக்கிற வகையில் கனகச்சிதமாகத் தனது படங்களைத் தேர்ந்தெடுத்தவர். அப்படிப்பட்டவர் ப.பாண்டி, ராயன் படங்களுக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார்; அது காதல் வகைமையில் அமைந்த படம். அந்தப் படத்தில் தலைகாட்டாமல் வெறுமனே டைரக்‌ஷனை மட்டுமே கவனிக்கிறார் என்றால் எதிர்பார்ப்பு இன்னொரு திசையில் உயரும் தானே. அப்படியொரு […]

காமமே இல்லாத காதலும் உண்டு!

Swathi Mutthina Male Haniye (முத்துவைப் பிறப்பிக்கும் மழைத் துளி) கன்னடப் பட விமர்சனம்: கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டே இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள்! ஐந்தாறு துணைக் கதாபாத்திரங்கள்! ஒரு வீடு, ஒரு மருத்துவமனை, ஒரு ஏரி இவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு இரண்டு மணி நேர படத்தை – கண்ணிறைந்த பசுமைக் காட்சிகளோடு – காலத்தால் அழியாத காவியமாகக் கொடுக்க முடியுமா? […]

விஷத்தைச் சாப்பிட்டால்தான் சோறா?

இந்தியின் ஆதிக்கம் அதிகமான மராத்தி போன்ற மொழிகளுக்கு நேர்ந்த கதி அதுதான், தமிழுக்கும் அது நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக்கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்.

என்னுடைய உலகம் நண்பர்களால் உருவாக்கப்பட்டது!

கவிதை எழுதுவது என்பது வாழ்வனுபவங்களினூடே தோன்றும் மின்னல் ஒளி ஊற்று போன்றது என்பது மனுஷ்யபுத்திரனுடன் பேசும்போது தெரிகிறது. சக்கர நாற்காலியிலிருந்து, சிறு வயது முதல் அவர் காணும் உலகம், மிக நிதானமாக அவர் பார்வையின் முன் விரிந்திருக்கிறது. அவரைத் தோளோடு அணைத்து, துவரங்குறிச்சியிலிருந்து மீட்டெடுத்து கவிதைகளோடு உலகிற்கு அளித்திருப்பது அவருடைய அருமையான நண்பர்கள்தான். “என் நண்பர்களைப் பற்றி நினைக்கும்போது உண்மையில் அது என்னைப் பற்றியே நினைப்பதாக இருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எனது நண்பர்கள்தான் என்னை இடையறாது […]

‘பைங்கிளி’ – சஜின் கோபுவின் ‘ஒன் மேன் ஷோ’!

‘பைங்கிளி’யின் இரண்டாம் பாதி செம்மையானதாக எழுதப்படவில்லை. போலவே, கிளைமேக்ஸ் திருப்பங்கள் சட்டென்று நிகழ்ந்து முடிந்துவிடுகின்றன.