ட்ராமா – குழந்தைப்பேறின்மை பிரச்சனையின் இன்னொரு முகம்!

மருத்துவ உலகம் குறித்த திரைப்படங்கள் பார்வையாளர்களின் கவனத்தைக் குவிப்பதில் தடுமாற்றங்களை எதிர்கொள்ளும். அப்படங்கள் பேசும் பிரச்சனைகள் சமகாலத்தைப் பிரதிபலிக்கும்பட்சத்தில், அவற்றின் உள்ளடக்கம் எளிமையாக இருக்கிறபோது, அவை பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில் ‘செயற்கை கருத்தரிப்பு’ நுட்பத்தைப் பற்றிப் பேசும் வகையில் குற்றம் 23, காதலிக்க நேரமில்லை, மிரியம் மா, யசோதா உள்ளிட்ட சில திரைப்படங்கள் இதுவரை வந்திருக்கின்றன. அவை வெவ்வேறு வகைமையில் அமைந்திருந்தன. அவற்றில் ஒன்றாக அமைந்திருக்கிறது தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ள ‘ட்ராமா’ (Trauma). ஆங்கிலத்தில் […]

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட மனோஜ்!

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகனும் நடிகரு​மான மனோஜ் பார​தி​ராஜா மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று உயி​ரிழந்​தார். அவருக்கு வயது 48. அமெரிக்​கா​வின் தெற்கு புளோரி​டா​வில் உள்ள பல்​கலைக் கழகத்​தில் நாடகக்​கலை படித்து வந்த மனோஜ், 1999-ம் ஆண்டு வெளி​யான ‘தாஜ் மஹால்’ திரைப்​படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார். இந்​தப் படத்தை பார​தி​ராஜா இயக்​கி​னார். அதைத் தொடர்ந்​து, கடல் பூக்​கள், வருஷமெல்​லாம் வசந்​தம், அல்லி அர்​ஜு​னா, ஈரநிலம், சமுத்​திரம், அன்​னக்​கொடி என பல படங்​களில் நடித்​தார். கடைசி​யாக ‘விரு​மன்’ படத்​தில் […]

துன்பங்களைக் கரைத்துவிடுகிறது காலம்!

தாய் சிலேட்: காலங்கள் கடந்தபின் துன்பங்கள் கூர்மையை இழந்துவிடுகின்றன! – எழுத்தாளர் அசோகமித்ரன்

உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்!

ரசனைக்குரிய வரிகள்: உங்கள் மதிற்சுவருக்கு அப்பால் இருக்கிற அழகுகளை உங்கள் இடத்தில் இருந்தே ரசியுங்கள்; அருகே சென்று அவ்வழகின் உண்மைத் தன்மையை பரிசோதிக்க எண்ணாதீர்கள்; அது வானவில்லை கையில் பிடித்துப் பார்ப்பது போன்றது; நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த சூரியகாந்தி வயலில் கோடைப் பாம்பொன்று நெளிந்து கொண்டிருக்கலாம்; நீங்கள் தூரத்திலிருந்து பார்த்த செம்பருத்தியின் நிழலில் சருகுகள் கொட்டிக் கிடக்கலாம்; நீங்கள் தூரத்திலுருந்து மகிழ்ந்த நதிக்கரையில் ஓர் இடுகாடு இருக்கலாம்; நீங்கள் தூரத்திலிருந்து ரசித்த மரத்தின் கிளையில் ஓர் எலும்புக்கூடு […]

விட்டுச் சென்ற படைப்புகளும் கனவுகளும்…!

எழுபத்தைந்து வயதிலும் முதிர்ச்சியின் சலிப்பும், அலுத்துக்கொள்ளும் இயல்புமில்லாமல், இறுதிவரை எழுதிக் கொண்டிருந்த படைப்பாளியான சுந்தர ராமசாமி உடல்நலக் குறைவேற்பட்டு மறைந்திருக்கிறார். சிறுவயதில் இளம்பிள்ளைவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் உடலுடன் துவங்கிய போராட்டம். வெவ்வேறு காலகட்டங்களில் அவருடைய இறுதிக்காலம் வரையிலும் தொடர்ந்திருக்கிறது. பதினெட்டு வயதில் தமிழை சுயமாகக் கற்றுக் கொண்டு எழுதத் துவங்கி புதுமைப்பித்தனின் அடிச்சுவட்டைப் பிடித்து மேலேறித் தனக்கென்று வளமான மொழிநடையை உருவாக்கிப் படைப்புகளின் மூலம் செழுமைப்படுத்தியவர். நேர்ப்பேச்சின் மூலமும், எழுத்தின் மூலமும் தொடர்ந்து படைப்பாளிகளுக்குத் தூண்டுதலை ஏற்படுத்திக் […]

கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!

இந்த செய்தி, 17 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.