பள்ளிப் பருவத்தில் படிப்பைவிட பாடுவதில் தான் அதிக ஆர்வம்!

சுற்றி மூன்றுபுறமும் உப்பணாறு. இன்னொரு பக்கம் கடல். இதற்கிடையில் தீவு மாதிரியான சின்னக் கிராமம் புஷ்பவனம். விவசாயக் குடும்பம். “எட்டாவது வகுப்பிலிருந்து அடுத்த வகுப்புக்கு போக விரும்புறவங்க எல்லாம் கை தூக்குங்க…” ஆசிரியர் சொன்னதும் பல மாணவர்களும் கைதூக்க, தூக்காமல் உட்கார்ந்திருந்த மாணவன் குப்புசாமி. படிப்பதில் அவ்வளவு விருப்பமில்லை. வேதாரண்யம் அங்கிருந்து 14 கி.மீ. ஒன்பதாவது வகுப்புப் படிக்கக் காலையில் கிளம்பி அலுமினியச் சட்டியோடு போகும் போது உடம்பெல்லாம் களைத்துவிடும். பள்ளியில் உட்கார்ந்ததும் கண்ணைச் சுழற்றும். தூக்கம் […]

லலித் கலா அகாடமியின் ஓவியங்களின் அற்புதம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: ஜனவரி பிறந்து சென்னையில் புத்தகக் காட்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் வேறு சில கலாச்சார நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு நாட்களாக சென்னையின் லலித் கலா அகாடமியின் சில மூத்த ஓவியர்களின் கண்காட்சி. அதற்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தார்கள் திரைக் கலைஞரான சிவகுமாரும் ஓவியரான மணியம் செல்வனும். பெரும்பாலும் வாட்டர் கலர் பாணியிலான ஓவியங்களை வரைந்திருந்த அரங்கில், தமிழகத்தில் உள்ள பல எழுத்தாளுமைகளை ஓவியங்களாக வடித்து வைத்துள்ளனர். பிரபலமான ஓவியர் சுந்தரம் […]

மனங்களை மயக்கிய சென்னை ஓவியக் கண்காட்சி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓர் ஓவிய கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்ட் ஹவுஸில் ‘குரு சிஷ்யன்’ என்ற ஓவியக் காட்சி. 2 சீனியர்கள், 2 ஜூனியர்களின் ஓவிய அணிவகுப்பு. நான்கு பேருடைய ஓவியங்களிலும் மாறுபட்ட களங்கள், நிறங்கள். ஓவியர் கிருபானந்தம் ஓவியங்களில் மாடுகள் கூட்டம் கூட்டமாக மேய்கின்றன. அதன் கொம்பும் தலையும் தொன்மங்களின் அடையாளம்போல முக்கோண வடிவில் கூர்மையாக இருக்கின்றன. கருப்பு வெள்ளையில் மாடுகள் கூட்டமாக இருப்பது போன்ற ஓவியம் நம்மைக் கவர்கிறது. […]

ஓவியம் குறித்த ரசனை மக்களிடம் ஏன் இல்லாமல்போனது?

ஒரு கிராமத்துப் பெண் காலையில் எழுத்தவுடன் என்ன செய்கிறாள் சொல்லுங்கள்? அவளுக்கு எவ்வளவோ கவலைகள் இருந்தாலும், முதல் வேலையாக வாசல் தெளித்துக் கோலம் போடுகிறாள்.. தினமும் ஒரு கலை வெளிப்பாட்டைச் செய்துவிட்டுத்தான் தன் நாளைத் தொடங்குகிறாள். இதுதான் தமிழனின் ஓவிய மரபு. ஆனால், இந்தக் கோலங்களை ஆவணப்படுத்தி உலக அளவில் கொண்டு செல்வதற்கு ஷந்தால் ஜுமால் எனும் ஒரு பிரெஞ்சுக்காரப் பெண்மணிதான் வரவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு மார்கழி மாதமும் பிரான்சிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஷந்தால் ஜுமால் பல்வேறு […]

ஆணாதிக்கத்தைக் கட்டுடைக்கும் ‘அல்லி அரசாணி’!

சனாதன பாலியல் சமன்பாடு தலைகீழாக்கப்பட்டு ஒரு தன்னிச்சையான சுயத்திறன்மிக்க பாலியல் பெண்படிமம் இக்கதைப்பாடலில் முன்வைக்கப்படுகிறது.

பிகாசோவின் வெற்றி ரகசியம்!

உலகப் புகழ்பெற்ற பிறகும், பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலைப் படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.