உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும்?

தமிழகத்தில் தற்போது வெவ்வேறு சமூக வலைத்தளங்கள் வழியே கசிகிற ஒரு செய்தி உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடான சில வேலைகள் துவங்கிவிட்டன என்பதுதான்.
 
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை சென்னை போன்ற குறிப்பிட்ட பெருநகரங்களில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
 
மற்ற பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் சரிவர இயங்காத நிலையில் இருக்கின்றன.
 
அதிலும் குறிப்பாக மதுரை போன்று வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மாநகராட்சிகளில் இன்னும் அதிகபட்சமான குழப்பம் நீடித்துக் கொண்டிருக்கிறது.
 
தமிழக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தற்போது நடந்து முடிந்திருக்கிறே இடைத்தேர்தல்களில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.
 
இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை அவர்கள் தமிழகம் முழுக்க நடத்தினால், அவற்றிலும் தவெக அரசுக்கு சாதகமான முடிவுகளும் வெளிவரலாம் என்பதுதான் அரசியல் ஆர்வலர்களின் கணிப்பாக இருக்கிறது.
 
ஆனால், தற்போது உள்ளாட்சி அமைப்புகள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன?
 
சென்னை போன்ற பெரு நகரத்தையே எடுத்துக்கொள்வோம்.
 
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக சென்னையில் உள்ள எந்த சாலைகளும் சீரமைக்கப்படவில்லை.
 
அவை சரிவர அந்த ரோடு போடப்படாத நிலையில், அவை குண்டும் குழியுமாகவே காட்சிகளித்த நிலையில், கடைசி கட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்கள் சில சாலை வசதி போன்றவற்றை செய்ய முனையும்போதும் அதற்குள் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவந்துவிட்டதால், அந்த வேலையில் தொடர முடியவில்லை.
 
தற்போது தவெக அரசு பதவிக்கு வந்து ஐந்து மாதங்கள் வரை ஆகிவிட்டாலும் கூட இன்னும் இதுவரை உள்ளாட்சிப் பொறுப்புகளில் உள்ளாட்சி அமைப்புக்கள் சரிவர செயல்பட முடியாத நிலை இருக்கிறது.
 
அவற்றிற்கு மாநில அரசு ஒதுக்கும் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரிவரக் கொடுக்கப்படவில்லை என்கின்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது.
 
இதை வலியுறுத்தியபடி அண்மையில் சென்னையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் சென்னை நகர மேயர் பிரியாவும் அதிமுக சார்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளும் கருப்புச் சட்டை அணிந்து வந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அது ஊடகங்களிலும் பரவலான செய்தியானது.
 
அவர்கள் முன்வைத்த முக்கியமான ஒரு கோரிக்கை, கடந்த ஐந்து மாத காலமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்த வேலையும் செய்வதற்கான போதுமான நிதியை தமிழகத்தில் ஆளும் தவெக தலைமையிலான அரசு அளிக்கவில்லை.
 
இதனால் பல வேலைகள் சரிவர செய்ய முடியவில்லை. இதனால் அந்த நிதியை உடனே ஒதுக்கித் தாருங்கள் என்பதைத்தான் அவர்கள் கோரிக்கையாக வைத்திருந்தார்கள்.
 
ஆனால், இதுவரை அவர்கள் கோரிக்கை விடுத்தபடி எந்தவிதமான நிதியும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கப்படவில்லை.
 
அதிலும் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் தற்போது பெருமழை பெய்து வரும் காரணத்தால், பெரும்பாலான சாலைகள் முழுக்க சீர்கெட்டிருக்கின்றன.
 
பள்ளமும் மேடுமுமாக காட்சியளிக்கும் சாலைகளில் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் செல்பவர்கள் கடுமையான சிரமங்களை அனுபவிக்கிறார்கள். பல விபத்துக்களை எதிர்கொள்கிறார்கள்.
 
சென்னையின் பல பகுதிகளில் வெவ்வேறு வேலைகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாத நிலையில் இருக்கின்றன.
 
இந்த நிலையில் பெருமழை பெய்கிறபோது அந்தந்த குடியிருப்பு வாசிகள் மிகவும் நொந்துபோகும் மனநிலைக்கு வந்திருக்கிறார்கள்.
 
ஆனால், இதை சரிசெய்ய வேண்டிய கவுன்சிலர்கள் அதாவது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தற்போது செயலற்றுப் போயிருக்கிறார்கள்.
 
இதுதான் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிற தவெக அரசு கணக்கில் எடுத்துக்கொண்டு, செயலற்ற நிலையில் நீடித்து வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
 
அதற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதியை மாநிலத் தேர்தல் ஆணயத்துடன் கலந்து ஆலோசித்து உடனடியாக அறிவித்து செயல்பட்டால் தான், இங்கு உள்ளாட்சித் தேர்தல்கள் உள்ளாட்சி அமைப்புகள் உயிர் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
 
அதன் மூலமாக சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்படவும் உதவியாக இருக்கும்.
 
உள்ளாட்சி அமைப்புக்கள் சரிவர செயல்பட்டால் தற்போது மழை, கடுமையான வெயில் இவற்றால் எழுந்திருக்கும் இன்னலிருந்து மக்கள் தப்பிக்க முடியும்.
 
பல நடவடிக்கைகளில் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிற தவெக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதை தமிழகம் மக்களின் விருப்பமாக இருக்கிறது.
 
– யூகி
Comments (0)
Add Comment