செய்தி:
திமுக – அதிமுக கூட்டணி என்பது ஆதவ் அர்ஜுனா பரப்பும் வதந்தி!
– முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
தற்போது திமுக – அதிமுக கூட்டணி பற்றிய வதந்தியை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பரப்புவதாகச் சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சரான சிவசங்கர்.
ஆனால், இத்தகைய கூட்டணி குறித்த வதந்தி தேர்தல் முடிந்த பிறகு உருவானதற்கு யார் காரணம்?
அப்போதே அதை அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணியிலும் இருந்த கட்சித் தலைவர்களே சாட்சியம் சொல்லியிருக்கிறார்களே.
அதையெல்லாம் மறந்துவிடுவாரா முன்னாள் அமைச்சர் சிவசங்கர்?