அதிமுகவில் மீண்டும் தவெகவுக்கான ஆதரவுக் குரல்!

செய்தி:   

சட்டசபைத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு இருக்கலாம்.

– எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் நிர்வாகிகள் கருத்து.

கோவிந்த் கமெண்ட்: 

சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு முன்பே தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்று அப்போதே சில மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாகச் சொன்னார்கள்.

தற்போது மிகவும் காலதாமதமாக அதே கருத்தை அதிமுக நிர்வாகிகள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், என்ன செய்வது? எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் எழுந்த எந்தக் குரலையும் பொருட்படுத்தாமல் ரகசியமாக திமுகவுடன் மட்டும் பேசியதை அதிமுக தொண்டர்கள் எளிதில் செரித்துக் கொள்வார்களா?

Comments (0)
Add Comment