முதல்வரால் ஏற்கப்பட்ட எதிர்கட்சித் தலைவரின் யோசனை!

செய்தி:   

திமுக சார்பில் தனி தீர்மானத்துக்கு ஆதரவளிக்கிறோம்; மேகதாது தீர்மானத்தை எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் குழுவாகச் சென்று மத்திய அரசிடம் வழங்கலாம்!

– எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் யோசனை.

கோவிந்த் கமெண்ட்: 

முதலில் தவெக ஆட்சிக்கு ஆறு மாத கால அவகாசம் கொடுப்பதாக அறிவித்துவிட்டு, பிறகு இரண்டு வாரங்களிலிலேயே சரமாரியான தாக்குதல்களை துவக்கிவிட்டது திமுக.

ஆனாலும், தற்போது மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் இப்படியொரு யோசனையை முன்வைத்து, அதைப் பாரபட்சம் காட்டாமல் தமிழக முதல்வர் விஜய்யும் ஏற்று, அதை தீர்மானத்தின் ஒரு பகுதியாக இணைத்திருப்பது நல்லதொரு ஆரோக்கியமான அரசியலைக் காட்டுகிறது. 

Comments (0)
Add Comment