செய்தி:
மாணவ மாணவிகள் உதவித்தொகை ரூ.1,000 வரவு வைப்பு; அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.
– முதல்வர் விஜய் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சின்போது, “மகளிர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
சென்றமுறை திமுக தனது வாக்குறுதிகளில் ஒன்றாக அதைத் தெரிவித்திருந்த போதும், மகளிர் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தவே, ஏறத்தாழ 800 நாட்களுக்கு மேல் ஆயிற்று என்பதையும் தற்போது குற்றம் சாட்டுகிற திமுக கவனத்தில் கொள்வது நல்லது.