வெற்றியைத் தீர்மானித்த ஒற்றை வாக்கு!

செய்தி:

திருப்பத்தூரில் 1 ஓட்டு வித்தியாசத்தில் தவெக வெற்றி! 

தவெக வேட்பாளர் – 83,365

திமுக வேட்பாளர் – 83,364

கோவிந்த் கமெண்ட்:

“நாமெல்லாம் ஓட்டுப் போட்டு என்ன ஆகப் போகிறது?” என்று என்னத்த கண்ணையா பாணியில், பலர் ஆதங்கப்பட்டுக் கொள்ளலாம்.

ஆனால், ஒரே ஒரு ஓட்டு கூட ஒருவரை வெற்றிபெற வைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது திருப்பத்தூரில் வெளிவந்திருக்கிற வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவு.

அங்கு போட்டியிட்ட தவெக வேட்பாளரான சீனிவாச சேதுபதி ஒரே ஓட்டு வித்தியாசத்தில் திமுகவை முந்தி வெற்றிபெற்றிருக்கிறார்.

ஒரே ஒரு வாக்குக் கூட வெற்றி, தோல்வியைத் தீர்மானித்துவிட முடியும் என்பதற்கான உதாரணம் திருப்பத்தூரில் நடந்த தேர்தல் முடிவு.

Comments (0)
Add Comment