பீகாரில் நடைபெற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான வாக்காளர் உரிமைப் பேரணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்தப் பேரணியில் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலினோடு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, திமுக எம்.பி. கனிமொழி, பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணிக்குப் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றிவிட்டதாகவும், 65 லட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்றும் தெரிவித்தார். மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பா.ஜ.க.வின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது கூறினார்.