நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்!

அதிமுக ஐடி விங் கேள்வி

தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அரசின் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

அப்போது, தமிழக சட்டப்பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஐடி விங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

“ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

முழு நேரலை… முழு நேரலை… அத்தனையும் உருட்டா சார்!

ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.

எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றும் எண்ணமே இல்லை போல. அப்படித்தானே சார்!” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

– வைஷ்ணவி பாலு

Comments (0)
Add Comment