செய்தி:
தனிமனிதத் துதி பாடலைத் தவிர்க்க வேண்டும்!
– பிரேமலதா விஜயகாந்த் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
தற்போதைய தேமுதிக தலைமைப் பொறுப்பிலிருக்கும் பிரேமலதா நல்லவேளை இதற்கு முந்திய ஆட்சியின்போது, சட்டப்பேரவையில் உறுப்பினராக அமரவில்லை.
அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால், துதி பாடிகள் எந்த அளவுக்கு ஒருவரை நனைய வைப்பார்கள் என்பது நன்றாகப் புலப்பட்டிருக்கும்.
ஒரே ஒரு கேள்வி.
தேமுதிகவில் அப்படிப்பட்ட தனிமனித துதிகள் அனுமதிக்கப்படுகிறதா? இல்லையா?