கீழடியில் வாழ்ந்த தமிழர்களின் முகம்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

கீழடியில் அகழாய்வு நடக்க ஆரம்பித்ததிலிருந்தே எத்தனையோ தொன்மப் பொருட்கள் கிடைத்த மாதிரியே எத்தனையோ சர்ச்சைக்குரிய விஷயங்களும் வியப்புக்குரிய அம்சங்களும் கிடைத்திருக்கின்றன.

சமீபத்தில், இங்கிலாந்தில் உள்ள ஆய்வகத்தில் கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆதாரமாக வைத்து எண்பது சதவிகிதம் அறிவியல் பூர்வமாகவும், இருபது சதவிகிதம் கலை நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பதாக அன்றைய தமிழர்களின் முகத்துக்கான வரைபடங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து, கீழடி வாழ்வியல் அறிவியல் பூர்வமாக நிரூபணமாகி இருக்கின்றது என்று பெருமதப்பட்டிருக்கிறார் தமிழ்நாடு முதல்வரான மு.க.ஸ்டாலின்.

வெளியிடப்பட்டிருக்கிற தமிழர்களின் முகத்தைப் பாரத்தால், சற்றே சர்வதேச அளவில் ஈரானியச் சாயல் தெரிவதாகவும் சொல்கிறார்கள்.

2000-ம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் முக அமைப்பை தற்போதைய நவீனத் தொழில் நுட்பத்தின் வசதிக்கிடையில் கொண்டுவருவது சற்றே சிரமமான விஷயமாக இருக்கலாம்.

வழக்கமாக ஆதிகால தமிழர்களின் முக அமைப்பை வெளியிடும்போது, அடர்த்தியான தாடி, மீசையுடன் ஏறத்தாழ காட்டுமிராண்டி மாதிரி சித்தரிப்பதுதான் பொதுவான வழக்கம்.

ஆனால், இந்தக் கீழடி வரைபடத்தில் இருக்கிற தமிழர்களின் முகங்களைப் பார்த்தால், அப்போதுதான் மழுங்க சவரம் செய்துவிட்டு சலூன் கடையிலிருந்து வெளிவரும் நம்ம பெரியப்பாவின் முகத்தைப்போலத்தான் இருக்கிறது.

இதற்கு மேலும் ஆய்வு செய்பவர்கள் பக்கத்திலிருக்கும் படத்தை இன்னும் கொஞ்சம் நெருங்கி நன்றாக உற்றுப் பார்க்கவும்.

 – யூகி

Comments (0)
Add Comment