செய்தி:
சென்னையில், சாக்கு மூட்டையில் பீஹார் இளைஞர் சடலம்; மனைவி குழந்தையையும் கொன்று வீசிய கொடூரம்.
- அதே மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்.
கோவிந்த் கமெண்ட்:
பீகாரைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
முக்கியமாக தமிழ்நாட்டில் பரவலாக நடைபெறும் கட்டுமானப் பணிகளில் இவர்களுடைய பங்கு பிரதானமாக இருக்கிறது.
இந்த நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில், கண்டெடுக்கப்பட்ட விதம் அதிர்ச்சி அளிக்கின்றது.
அதோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டிருப்பது, இன்னும் கொடுமை.
கொடூரமான இந்தச் செயலை அவருடன் பணியாற்றிய தொழிலாளர்களே செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்கிடையில் ஏற்பட்ட பகையில், இத்தகைய கொடுமையான கொலையில் போய் முடிந்திருக்கிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் வடமாநிலத்தில் குறிப்பாக பீகாரில் எத்தகைய அதிர்ச்சியை உருவாக்கும் என்பதையெல்லாம் இந்த சமயத்தில் நினைவில்கொள்ள வேண்டியிருக்கிறது.