கோவில் நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகிறதா?

செய்தி :   

பழனி கோவில் விவகாரத்தைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோவிலின் 60 கோடி ரூபாய் நில மோசடியில் தாசில்தார், சார்பதிவாளர்கள் உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவிந்த் கமெண்ட் : 

தமிழ்நாடு முழுக்க இருக்கிற ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு எவ்வளவோ சொத்துக்கள் இருக்கின்றன. நிலங்களும் இருக்கின்றன.

இவற்றில் கோவில் சிலைகளும் கடத்தப்பட்டிருக்கின்றன. கோவில் நிலங்கள் அபகரிக்கப்படுவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன.

இந்நிலையில், தற்போது பழனியைத் தொடர்ந்து மதுரையிலும் நில அபகரிப்புப் புகார்கள் வெளிவந்திருக்கின்றன.

எல்லாம் வல்ல முருகப் பெருமானும், பலரும் வணங்கும் மதுரை மீனாட்சியம்மனும் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் போலிருக்கிறது.

Comments (0)
Add Comment