மணாவின் பக்கங்கள்

பசி நகர்த்திய அந்த நாட்கள்…!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 19 எழுத்தாளர்களையோ, படைப்பாளர்களையோ, கலைப்படைப்பாளர்களையோ அவர்கள் வாழும் காலத்தில், உரிய மதிப்புக் கொடுத்தார்களா? என்கிற கேள்வியைத் தமிழ் சூழலில் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தக் கால பாரதியிலிருந்து ‘எழுத்து’ இதழை நடத்திய படைப்பாளியான சி.சு.செல்லப்பா வரை பல எழுத்தாளர்களை எப்போதும் பற்றாக்குறையான வாழ்க்கையைத்தான் வாழ வைத்திருக்கிறது நம் தமிழ்ச் சமூகம். இது தொடர்பான இரு சம்பவங்கள் மட்டும் இங்கே… இலங்கையைச் சேர்ந்த தமிழின் நவீனப் படைப்பாளியாக கருதப்படும் பிரமிள் என்று […]

கிரிமினல் தனத்திற்கும் எல்லைகள் உண்டு!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 18 ‘எந்தவொரு கிரிமினல் தனத்திற்கும் ஒரு எல்லை உண்டு.’  இந்த வாசகத்தைப் படிக்க நேர்கிறபோது சிலர் ஆச்சர்யப்படலாம், சிலர் முரண்பாடாகவும் நினைக்கலாம். கிரிமினல் மயமானவர்கள் பல்வேறுத் துறைகளிலும் ஊடுருவி பேராதிக்கம் செலுத்துவது அதிகரித்து வரும் நிலையில், அளவு கடந்த ஊழலும் எல்லையற்ற கிரிமினல் போக்கும் கூடிக் கொண்டுவரும் காலச் சூழலில், மேலே சொன்ன தலைப்பு வியப்பளிக்கலாம்தான்.  ஆனால், இந்த வாசகம் அனுபவப்பூர்வமாக உணர்ந்த உண்மை. அதைப்பற்றி நேரடியாக என்னுடைய அனுபவத்தில் […]

கருத்து மாறுபட்டாலும் மாறாதிருந்த நட்புணர்வு!

கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு – 17 ‘அரசியலிலோ, கருத்தியலிலோ நம்முடன் முரண்பட்டவர்களிடம் நாம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை’ என்று அரசியலிலோ சமூக செயல்பாட்டு இயக்கங்களிலோ இருக்கிறவர்கள் வேண்டுமானால் நினைக்கலாம். ஆனால், ஊடகத்துறைக்குள் வந்து பல்வேறு அரசியல் நிலைப்பாடு கொண்டவர்களைச் சந்திக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிற எந்த ஒரு ஊடகவியலாளரும் அப்படி நினைக்க முடியாது. அப்படி நினைத்து யாருடனும் பெரும் இடைவெளியையும் உருவாக்கிக் கொள்ள முடியாது. 45 ஆண்டுகளுக்கும் மேலான என்னுடைய ஊடக அனுபவத்தில், எனக்கென்று […]

வந்தா, வந்த மாட்டை கட்டமாட்டான்…!

கட்சிவிட்டு கட்சியோ அல்லது அணியோ மாறிக் கொண்டிருக்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நேரத்தில், நான் துக்ளக் இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, வெவ்வேறு கட்சியின் பேச்சாளர்களைச் சந்தித்துப் பேட்டி எடுத்தேன். அதில், மதுரையில் ஜனதா கட்சியின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாக இருந்தவரான ஜான் மோசஸ் தன்னுடைய கட்சியின் செயல்பாட்டைப் பற்றி பெருமை பொங்க இப்படிச் சொன்னார்: “எங்கக் கட்சியில – யாரும் வந்தா வந்த மாட்டை கட்ட மாட்டான், போன மாட்டை தேட மாட்டான்”. ஜான் மோசஸ் சொன்னது […]

ஏன் என்னை புரிந்து கொண்டீர்கள் அப்பா?

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 16 (தந்தையைப் புரிந்துகொள்ளத் தவறிய வாரிசுகளுக்கும், வாரிசுகளைப் புரிந்து கொள்ளாமல் தவறவிட்ட தந்தையருக்கும் இந்த அனுபவக் கட்டுரை சமர்ப்பணம்) “உங்க அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் இறந்துட்டாரு. கடைசி நேரத்துல அவர் கூட இருக்காம எங்கடா போன?” என்று கத்தியபடி எனது அப்பாவைச் சேர்த்திருந்திருந்த மருத்துவனை வளாகத்திற்குள் நான் நுழைந்ததுமே உறவினர்கள் இரண்டு பேர், என்னை தாக்கிய வேகத்தில் நான் கீழே விழுந்தேன். கீழே விழுந்ததும், என் மீது கனமான […]

வியப்பளிக்கும் சில ஊடகச் சந்திப்புகள்!

கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 15 ஜெர்னலிச வாழ்க்கையில் எத்தனையோ தலைவர்களைப் பார்த்து பழகுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், சில தலைவர்கள் காட்டிய அக்கறையும் பரிவும் ஒத்துழைப்பும் ஆச்சர்யப்படும் விதத்திலேயே அமைந்திருப்பது ஒருவிதத்தில் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும். குமுதம் வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, பேட்டிக்காக கலைஞரை சந்திக்கபோனபோது, குறும்பான புன்னகையுடன் வரவேற்றார். அப்போது, அவர் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பிலிருந்தார். மாலைப்பொழுது நெருங்கும் நேரத்தில், அவரை சந்திப்பதற்கு முன்பே அங்கு கூடியிருந்த அதிகாரிகள், “சரியா, அரைமணி […]