சொற்பொழிவுகள், வீடியோ

ஏழுமலையானுக்குத்தான் எத்தனை சோதனை!

செய்தி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை! – கணக்கில் வராத நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல். கோவிந்த் கமெண்ட்: திருமலை திருப்பதி ஏழுமலையானுக்குத்தான் எத்தனை சோதனை. ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் கலப்படம் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதைத் தொடர்ந்தும் சில பரபரப்புகள் கிளம்பின. இப்போது அந்தக் கோவிலை நிர்வகிக்கும் இணை நிர்வாக அதிகாரி ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, குறிப்பிட்ட அளவிற்கு பணமும் […]

தெருநாய்கள் கடிப்பதைக் கட்டுப்படுத்த புது வழியா?

செய்தி : தெருநாய் தத்தெடுப்பை ஊக்குவிக்க டிஜிட்டல் தளம்! – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி அறிவிப்பு. கோவிந்த் கமெண்ட்: தமிழகத்தில் இதற்கு முன்பும் தெருக்களில் நாய்கள் திரிந்து கொண்டுதான் இருந்திருக்கின்றன. அவை யாரையும் விரட்டி கடித்துக் குதறியதெல்லாம் செய்திகளாக அப்போது வெளியாகவில்லை. ஆனால், இப்போது பல மாநிலங்களிலும் நாய்கள் பலரை விரட்டிக் கடிக்கின்றன. குறிப்பாக சிறுவர் சிறுமிகளை விரட்டி விரட்டி கடிக்கிற காட்சிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்க்கிறபோது பதற வேண்டியிருக்கிறது. பசிக்கு சரிவர தீனி […]

முதல்வர் பேரிலேயே இப்படி ஒரு தொழில்நுட்ப மோசடி!

செய்தி : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல போலி வீடியோ! – மோசடி நபர்கள் பற்றி சிபிசிஐடி அதிரடி விசாரணை. கோவிந்த் கமெண்ட் : தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது, தவெக தரப்பிலும் சரி, திமுக தரப்பிலும் சமயங்களில் பாஜக தரப்பிலும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி சில பிரம்மைகளை உண்மைபோல கட்டமைப்பது நடக்கிறது. அதில், பல முக்கிய பிரமுகர்களைப் பேச வைப்பது மாதிரியான தொழில்நுட்பத்தை கையாளுகிறார்கள். முன்பு பிரதமர் மோடியை பற்றியும் […]

தவெகவினருக்கு ஏன் இந்த ஆர்வக் கோளாறு?

செய்தி : முதல்வர் விஜய்யை, பிரதமர் நாற்காலியில் ராகுல்காந்தியே அமர வைப்பார்! தவெக எம்எல்ஏ கனிமொழி கருத்து; காங்கிரஸ் எதிர்ப்பு. கோவிந்த் கமெண்ட்: தவெகவினர் ஆர்வக்கோளாறு மட்டுமல்ல அவசரக் கோளாறாகவும் இருக்கிறார்கள். தற்போது முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிற விஜய்யை பிரதமர் பதவியில் உட்கார ஆசைப்படுகிறார்கள் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போது விஜய் உட்கார்ந்திருக்கும் நாற்காலியில் தொடர்ந்து சிக்கலின்றி உட்கார தவெகவினரே விரும்புகிறார்களா? என்பதுதான் கேள்வி.

ஓபிஎஸ்க்கு என்ன ‘தோஷம்’ பிடித்திருக்கிறது?

செய்தி : தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, ”பாம்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான மருத்துவ வசதி வேண்டும்” என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கேட்டார். அப்போது, முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், “பல்வேறு தொகுதிகளில் பாம்பு கடி இருப்பதாக அறிய முடிகிறது. ஆக, அந்தத் தொகுதியெல்லாம் தோஷம் இருப்பதாக நான் அறிகிறேன். அதனால் நாகதோஷம் கழிப்பதற்கு ஏதாவது பிரார்த்தனைகள் இருந்தால், அதை நடத்திக் காட்ட வேண்டும்.” என்றார். கோவிந்த் கமெண்ட்: இதே […]

பெண்கள் தனித்து வாழ்வது சவாலாக இருக்கிறது!

கார்ல் மார்க்ஸ் சிலை அமைப்பு, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றது, தனித்து குழந்தைகளை வளர்க்கும் பெண்களின் பிரச்சினை, தலித் பெண்கள் மாநாடு, போரில்லா உலகம், 33% இட ஒதுக்கீட்டை நிர்பந்தித்து முதலமைச்சர் விஜய்யை சந்தித்த பெண்கள் குழு.. என பரபரப்பாக இயங்கும் மனிதி செல்வியிடம் பீட்டர் துரைராஜின் நேர்காணல்; பொது வாழ்க்கைக்காக ஆசிரியர் பணியை துறந்த மனிதி செல்வி, இந்த நேர்காணலில் பெண்கள் எதிர் கொள்ளும் பலவிதமான பிரச்சினைகளை அலசுகிறார். தனித்து வாழும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் […]