ஞானேஷ்குமார் மீதான புகார்: திமுகவின் நிலை என்ன?

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரான ஞானேஷ்குமாருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து அவர் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி இயக்கத்தினரும் கூடவே காங்கிரஸ் இயக்கமும் பெரும் போராட்டத்தையும் பேரணியையும் முன்னெடுத்தபோது, அதில் திமுக போன்ற கட்சிகள் பாராமுகமாகவே இருந்தன.
 
அதேசமயம், திமுகவில் உள்ள சிலர் ஞானேஷ்குமாரின் பொறுப்புக்குக் கீழ் தேர்தல் ஆணையம் வந்த பிறகு நடந்த பல்வேறு தேர்தல்கள் எப்படி நடந்திருக்கின்றன என்பது குறித்த விசாரணை நடத்தப்பட்டு, மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் முன்வைத்தனர்.
 
இதற்கிடையே தமிழ்நாட்டில் இரு தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து கொண்டிந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் செய்தித் தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் ஞானேஷ் குமார் மீது பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 
ஒரு ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின்படி தாராபுரம், மதுராந்தகம் இரு தொகுதிகளிலும் திமுகவுக்கு வாய்ப்பு இருக்கிற பூத்துகளில் உள்ள வாக்குகள் திமுகவுக்கு வர முடியாதபடி சில தடுப்பு நடவடிக்கைகளை ஆணையம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார்.
 
டெல்லியில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, அதிலும் இரண்டிலும் தவெக வெற்றி பெற்ற பிறகு, திமுக தரப்பிலிருந்து இம்மாதிரியான கோரிக்கைகள் வைக்கப்பட்டிருப்பது அரசியலில் வினோதமாக பார்க்கப்பட்டிருக்கிறது.
Comments (0)
Add Comment