இதுவும் விஜய் எஃபெக்ட்டா?

விஜய் தவெகவை ஆரம்பித்து மிகக் குறுகிய காலத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு பல நடிகர்கள் புதிதாக இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
 
முதலில் நடிகர் தனுஷ், தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளைக் கூட்டி, சென்னையில் ஒரு விழாவை பிரம்மாண்டமாக நடத்தினார்.
 
தொலைக்காட்சிகளிலும் அது குறித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டது. அதில், அவர், தான் உடனடியாக அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்கிற விதத்தில் தான் சொல்லியிருந்தார்.
 
அதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அண்மையில் போரூரில் தனது ரசிகர்மன்ற நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோரை ஒரே இடத்தில் கூட்டி விரிவாகப் பேசியது பொதுவெளியில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
 
அந்தக் கூட்டத்தில் சிவகார்த்திகேயனும் தான் நற்பணிகளை செய்து கொண்டிருப்பதாகவும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை என்கிற விதத்திலேயே தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
 
இதேபோல் சூர்யாவும் இடையில் ரசிகர்களைச் சந்தித்தார். அப்போது, நான் அரசியல் பண்ண மாட்டேன்” என்று சொல்லியிருக்கிறார்.
 
இன்னும் சில பேர் வருவார்கள் இதைப்போலவே வேறு சில நடிகர்களும் இயக்கத்தையோ அல்லது ரசிகர்மன்ற மன்றங்களையோ முடுக்கிவிடுவார்கள் என்று வெவ்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
 
இந்த நிலையில், மிக அண்மையில் வெளிவந்து பெரும் வெற்றியை பெற்றிருக்கிற ‘பக்தா’ என்கின்ற படத்தில் நடித்த சிறுவன் (சாய் பிரித்வி ராஜ்) ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பேட்டி கண்டது.
 
இந்த பக்தா படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த அந்த சிறுவன், பத்து வயதான சிறுவன் தான் சினிமாவில் பேசிய ஒரு நீண்ட வசனத்தை அப்படியே அந்த பேட்டி எடுத்த செய்தியாளருக்கு முன் பேசிக் காட்டினார்.
 
அதோடு அவரிடம் செய்தியாளர் கேட்ட கேள்வி, “எதிர்காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்?”
 
அதற்கு அந்த பத்து வயதான, தற்போதுதான் நடிக்க வந்து, தனுஷுடனும் நடித்துக் கொண்டிருக்கிற அந்த சிறுவன் கூறிய பதில், “நான் தமிழ்நாட்டின் சீப் மினிஸ்டராக ஆக வேண்டும்”
Comments (0)
Add Comment