கொரோனா தடுப்பூசிக்கு இப்படி ஒரு பின்விளைவா?

உலகம் முழுக்கப் பரவி விதவிதமாக பீதியை ஏற்படுத்திய கொரோனா இரண்டு கட்டங்களாக வந்து போய்விட்டது.
 
அப்படிக் கொரோனா பாதிக்கப்பட்ட காலத்தில் நிறைய பேர் உயிரிழக்க நேரிட்டது.
 
அப்போது, அதிலிருந்து எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் பலருக்கு இருந்த நிலையில்தான் பல்வேறு தடுப்பூசிகளை அரசே சிபாரிசு செய்தது.
 
அந்த சமயத்தில் அதன் பக்க விளைவுகள் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில், பலருக்கும் இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டன.
 
அதற்கடுத்து பூஸ்ட் தடுப்பூசி என்று தனியாகவும் போடப்பட்டது.
 
இப்படி மூன்று விதமான தடுப்பூசிகள் அப்போது போடப்பட்டவர்களுக்கு காலப்போக்கில் சில பிரச்சனைகள் ஏற்பட்டன.
 
இளம் வயதினருக்கு கூட கடுமையான மாரடைப்பு வந்து உயிரிழக்கக்கூடிய சூழ்நிலை உருவானது.
 
உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் கூட  அங்கே சட்டென்று இறக்கும் சூழ்நிலையும் உருவானது.
 
மிகவும் காலதாமதமாகத்தான் அரசு விழிப்படைந்தது.
 
கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது. அவற்றைத் தடுக்கும் விதத்தில் முன்னேற்பாடாக நடந்து கொள்வது குறித்த எச்சரிக்கை விடுத்தது மாநில சுகாதாரத்துறை. இதுபோன்ற ஒரு எச்சரிக்கை விடுத்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
 
தற்போது பிரிட்டனில் இத்தகைய தடுப்பூசி போடப்பட்டதற்கான மூலப்பொருள் குறித்த ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
 
அப்போது, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் பின்விளைவுகள் உருவாகி, இரத்த உறைநிலை போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதும் நடந்திருக்கிறது.
 
இதை  உறுதிப்படுத்தும் விதத்தில் ஒரு ஆய்வறிக்கை பிரபல மருத்துவ இதழில் வெளிவந்து பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
 
குறிப்பிட்ட அந்தக் கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருள் வினியோகிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவின் பெயரும் அடுத்து இடம் பெற்றிருக்கிறது.
 
பிரிட்டனில் அது விநியோகிக்கப்பட்ட மாதிரி இந்தியாவிலும் அப்போது வினியோகிக்கப்பட்டிருக்கிறது.
 
இப்போது பிரிட்டனில் அதற்கான பின்விளைவுகள் எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பது குறித்த தெளிவான ஆய்வு நடந்து, அதன் முடிவுகள் வெளியே வந்து அதற்கான அதிர்வை ஏற்படுத்தி இருக்கின்றன.
 
ஆனால், இங்கு இரண்டு தடுப்பூசிகளும் ஒரு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு அதன் வெவ்வேறு விதமான தாக்கத்தை உள்வாங்கியவர்களின் கதி என்ன?
 
அப்போது அந்த மருந்தை செலுத்திக் கொண்டவர்கள் வெவ்வேறு விதமான உடல் உபாதைகளுக்கும் ஆளாகி வருகிற பிரச்சினையை இந்தியா போன்ற நாடுகள் எதிர்கொண்டாலும், அது குறித்த விரிவான ஒரு ஆய்வுகள் தற்போது வரை மேற்கொள்ளப்படாதது ஒரு துரதிஷ்டம் தான்.
 
ஆக, ஒரு தடுப்பூசி செலுத்துவதற்கு நம்மை சிபாரிசு செய்தவர்கள் அந்த தடுப்பூசியின் விளைவு குறித்து ஏன் கவனிக்க மறந்து போனார்கள்?
 
–  லியோ

#Coronavirus #Covid19 #CovidVaccine #CovidVaccineSideEffects #VaccineSideEffects #CoronaVaccination #BoosterDose #CovidBooster #VaccineSafety #BloodClots #HeartAttack #CardiacArrest #HealthAwareness #MedicalResearch #VaccineResearch #UKStudy #IndiaHealth #PublicHealth #PostVaccinationEffects #Covishield

#கொரோனா #கொரோனாதொற்று #கொரோனாதடுப்பூசி #கொரோனாதடுப்பூசிபக்கவிளைவுகள் #தடுப்பூசிபக்கவிளைவுகள் #பூஸ்டர்தடுப்பூசி #தடுப்பூசிபாதுகாப்பு #இரத்தஉறைதல் #மாரடைப்பு #இதயநோய் #திடீர்மரணம் #உடல்நலபாதிப்பு #மருத்துவஆய்வு #தடுப்பூசிஆய்வு #சுகாதாரத்துறை #பொதுசுகாதாரம் #பிரிட்டன்ஆய்வு #கோவிஷீல்ட் #உடல்நலவிழிப்புணர்வு

Comments (0)
Add Comment