லட்சுமிகாந்தனை பின்பற்றுகிறவர்கள் அதிகரித்திருக்கிறார்களா?

லட்சுமிகாந்தன் என்கிற பெயர் சென்ற நூற்றாண்டில் அதிகம் ஊடகங்களில் அடிபட்ட ஒரு பெயர்.

மிக மலிவான தாள்களில் அச்சடிக்கப்பட்ட தரக்குறவான மஞ்சள் பத்திரிகைகள் இருந்த காலகட்டம் அது. அதைப் போன்ற ஒரு இந்து நேசன் என்கின்ற பத்திரிகையைத் தான் நடத்தி வந்தார் லட்சுமிகாந்தன்.

அதில் அப்போது திரையுலகத்தில் பிரபலமாக இருந்த பல நடிகர் நடிகைகளைப் பற்றிய செய்திகளை அப்போதைய ஊடக மொழியில் சொன்னால், அப்போது மிகவும் பரபரப்பாக விற்பனையாகும் அளவுக்கு வெளியிட்டு வந்தார்.

அப்படிப்பட்டவர் சென்னை புரசைவாக்கத்தில் ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு புகாரும் அளித்த நிலையில் உயிரெழுந்தார்.

அவரது இறப்பு அன்றைய ஊடங்களில் பெரும் பரபரப்பானது.

அப்போது திரைவுலகில் சூப்பர் ஸ்டார்களாக இருந்த தியாகராஜ பாகவதர் மீதும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதெல்லாம் நடந்தேறியது.

பிறகு விசாரணை நடத்து சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அதில், ஏழிசை மன்னர் என்று அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர் அதற்குப் பிறகு வெற்றியை ஈட்டவே இல்லை.

அதன் பிறகு சொந்த வாழ்வில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து மிகக் குறைந்த வயதிலேயே அவர் காலமானார்.

அன்றைய ஊடகங்களில் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு என்பது மிகவும் பரபரப்பாக அடிபட்டிருக்கிறது.

ஒரு விதத்தில் பார்த்தால், லட்சுமிகாந்தன் அன்று மலிவான காரியத்தைப் பயன்படுத்தி நடத்திய மஞ்சள் பத்திரிகையின் அதே உள்ளடக்கத்தைதான் தற்போது வெல்வேறு சமூக வலைத்தளங்களும் சில குறிப்பிட்ட ஊடகங்களும் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். அப்போது தமிழக அரசியலில் எப்போதுமே மிக கேவலமானபடி மேடைப் பேச்சை மாற்றுவது என்பது எப்போதுமே நடந்து வந்திருக்கிறது.

அதற்கென்று தனித்த ‘தீப்பொறி’ பறக்கிற பேச்சாளர்களோ அல்லது  ‘வெடிகுண்டு’ அடையாளமாகக் கொண்ட பேச்சாளர்களோ அல்லது ‘வெற்றி’ மயமான பேச்சாளர்களோ இருந்து வந்திருக்கிறார்கள்.

முழுக்க ஆபாச மயமாக அவர்கள் பேசும்பேச்சுக்கு அன்றைக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அதை ரசிப்பதும் நடந்திருக்கிறது.

அதில் திராவிடக் கட்சிகள் மட்டுமல்ல தேசியக் கட்சிகளில் கூட அதைபோல பேசுகிறவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அன்றைக்கு பெண் பேச்சாளர்களும் இத்தகைய ஆபாசப் பேச்சை பேசிப் பாப்புலராகி இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

ஆக, ஆபாசப் பேச்சில் எந்த விதமான பால் பேதமும் இல்லை. அன்றைக்கு இருந்த மலிவான பேச்சாளர்கள் ஏதோ ஒரு கூட்டத்தில் பேசியதைத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலர் பேசுகிறார்கள்.

மேடைப் பேச்சுக்களில் இதே ஆபாச பேச்சுக்கள் அலையெடுத்த மாதிரி பேசப்படுகின்றன.

தமிழக முதல்வர் விஜய் குறிப்பிடுகிறபடி ஆபாச நதி தமிழகத்தின் ஊடகங்களிலும் மேடைப் பேச்சுக்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

எதிர்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கிறவரும் மேடையில் இரட்டை அர்த்தத்தில் பேசி கைதான பிறகும் மறுபடியும் மேடையில் ஆபாசத்தை மையப்படுத்தி ‘மூடு’ பற்றிப் பேசுகிறார்.

இன்னொரு கட்சித் தலைவர் தன்னுடைய பிரச்சாரத்தில் பாலிடாயில் பத்தி பேசுகிறார். இப்படி அதோடு சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பேச்சு எல்லை மீறும் அளவுக்கு போயி அவர்கள் கைதாகியிருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு தமிழக பெண் அமைச்சர் குறித்து, ஒரு எம்எல்ஏ மேடையில் பேசியது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஆனால், அதை பேசியவர்கள் யாருமே தான் கேவலமாக பேசுகிறோம் என்பதை உணரவில்லை என்பது தான் இங்குள்ள விசித்திரம்.

ஆபாசமாக பேசுவதை ஒரு கௌரவத்தைப் போல நினைப்பது தான் தமிழக அரசியலில் நடந்து கொண்டிருக்கிற வினோதம்.

இத்தகைய ஆபாசங்கள் பொதுவெளியில் நவீனத் தொழில்நுட்பத்தோடு இணைந்து பரவலாகிக் கொண்டிருக்கும் நிலையில், இதைத் தடுக்கிற விதத்தில் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

லட்சுமிகாந்தனை மறைமுகமான அல்லது நேரடியான வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வதைப் போல தலைவர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் தற்போது எல்லா இடங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நவீனத் தொழில்நுட்பத்தின் ஊடாக அதே மஞ்சள் நதி ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் வெட்கத்தோடு உணர வேண்டி இருக்கிறது.

– யூகி

Comments (0)
Add Comment