ஏழுமலையானுக்குத்தான் எத்தனை சோதனை!

செய்தி:

திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை!

– கணக்கில் வராத நகை, பணம், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல்.

கோவிந்த் கமெண்ட்:

திருமலை திருப்பதி ஏழுமலையானுக்குத்தான் எத்தனை சோதனை.

ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் கலப்படம் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதைத் தொடர்ந்தும் சில பரபரப்புகள் கிளம்பின.

இப்போது அந்தக் கோவிலை நிர்வகிக்கும் இணை நிர்வாக அதிகாரி ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தியபோது, குறிப்பிட்ட அளவிற்கு பணமும் பொருளும் சிக்கியிருக்கிறது.

இதற்கு மற்றவர்கள் நடவடிக்கை எடுப்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், ஏழுமலையான் இதற்கு என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பார்?

Comments (0)
Add Comment