செய்தி:
நாடு முழுவதும் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளிகளில், 24000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் 7 கோடி பேசும் தமிழைக் கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிந்த் கமெண்ட்:
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான சு.வெங்கடேசன் எழுப்பியிருக்கும் கேள்வி மிகவும் நியாயமானதுதான்.
பொதுமக்களால் அதிகம் பேசப்படாத மொழியாகவும் கருவறை மொழியாகவுமே இருக்கிற சமஸ்கிருதத்திற்கு கூடுதலான ஆசிரியர்கள் நியமிக்கப்படும்போது, கீழடிக்கு முன்பிருந்தே தோன்றியதாக தொன்மையால் உறுதிப்படுத்தப்பட்ட தமிழுக்கு ஏன் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது நடக்கிறது.
தமிழ் மொழிக்கு ஏன் உரிய ஒதுக்கீடு இல்லை என்பது வெங்கடேசன் எம்பியின் தனிப்பட்ட குரல் மட்டுமல்ல அது தமிழ்மக்களின் குரல்.