அருமை நிழல் :
பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி.கே. பட்டம்மாளின் மகன்வழிப் பேத்திதான் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன். மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தியும் கூட.
பாட்டியைப் போலவே, நித்யஸ்ரீயும் பாபநாசம் சிவன் மற்றும் கோபாலகிருஷ்ண பாரதி ஆகியோரின் பாடல்களை மேடையில் பாடிப் புகழ்பெற்றார்.
பாபநாசம் சிவனின் இசைத் தொகுப்புகளை இரண்டு ஆல்பங்களாக வெளியிட்ட நித்யஸ்ரீ, ‘பாபநாசம் சிவன் – எ லெஜென்ட்’ என்ற தலைப்பில் ஒரு விரிவுரையும் கொடுத்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடிய அவர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார்.
கர்நாடக சங்கீத வல்லுனராக மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என நூற்றுக்கணக்கானப் பாடல்களைப் பாடியுள்ளார்
இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டத்தை வெளிபடுத்தும் விதமாகப் பல தேசபக்திப் பாடல்களைக் கச்சேரிகள் ஒருங்கிணைத்து பாடியுள்ளார்.
குறிப்பு: நித்யஸ்ரீ மகாதேவன் தனது பாட்டி டி.கே. பட்டம்மாள் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.