யாருடன் கூட்டணி வைத்தாலும் கொள்கையில் தெளிவாக இருக்கும் திமுக!

கலைஞர் விளக்கம்

கேள்வி : பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா? 

கலைஞர் பதில்: “யாருடன் கூட்டணி வைத்தாலும் திமுக கொள்கையில் தெளிவாகவும் தனித்தன்மையுடனும் திமுக இருக்கும் என்பதும் அதற்கு மாறாக எதுவும் நடந்தால் கொள்கைக்காக எந்த இழப்பையும் எதிர்கொள்ளும் என்பதும் கடந்த கால வரலாறு. சமூக ஒற்றுமையும் மத நல்லிணக்கமும் திமுகவின் லட்சியங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

கூட்டணி குறித்து திமுகவின் நிலைப்பாடு இதுதான். யாரோடு கூட்டணி என்பது நடைமுறை சார்ந்த பிரச்சனை.

திராவிடக் கருத்தியலில் சமரசம் இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவின் நிலையும் இன்று அதன் நிலையையும் எண்ணிப் பார்த்தால் வேறுபாடு தெரியும்.

அது போலவே காங்கிரசின் நிலையும். மத்தியில் வேறு மாற்றே இல்லை. புதிய மாற்றுக்கான அடிப்படைகூட திராவிடக் கருத்தியல், மாடல் சார்ந்ததாகவே தென்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

– எழுத்தாளர் மணா தொகுத்த “கலைஞர் என்னும் மனிதர்” என்ற நூலிலிருந்து ஒரு பகுதி.

Comments (0)
Add Comment