சில மாதங்களாக அமெரிக்காவுக்கும் ஈரான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்ச் சூழலால், உலகளாவிய அளவில் எவ்வளவு பாதிப்புகள்?
பங்குச்சந்தை வர்த்தகம் சரிந்து பல நாடுகளில் பொருளாதாரமும் சரிந்து உருவான பொருளாதாரச் சிக்கலை, பல நாடுகளில் உள்ள சாமானிய மக்கள் சிரமத்துடன் அனுபவிக்க வேண்டியிருந்தது.
ஒரு வழியாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உருவாகி, பல நாட்டு மக்கள் நிம்மதி பெருமூச்சை விட்ட நிலையில், மறுபடியும் அமெரிக்க – ஈரான் இடையிலான ஒப்பந்தம் முறிந்து, போர்ச்சூழல் மீண்டும் தீவிரமாகி இருக்கிறது.
ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக டிரம்ப் குற்றம் சாட்ட, அமெரிக்க மீறியதாக ஈரான் குற்றம்சாட்டியது.
இதையடுத்து ஈரானின் எண்ணெய் உற்பத்தி சார்ந்த பல இடங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன.
பதிலுக்கு ஈரான் அமெரிக்காவை ஆதரிக்கும் இஸ்லாமிய நாடுகளில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
கடுமையான விளைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இரு தரப்புமே பரஸ்பரம் எச்சரித்திருக்கின்றன.
இந்தநிலையில், ஈரானுக்குள் ரகசியமாக வந்து ரஷ்யா தனது ஆதரவை வெளிப்படுத்தியதன் மூலம் மேற்காசியப் போர் சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையாக உருவாகிவிடுமோ என்கின்ற கவலை பலருக்கும் உருவாகி இருக்கிறது.
அப்படி ஒரு நிலை உருவானால், ஈரானும் பாதிக்கப்படும் அமெரிக்காவை ஆதரிக்கும் இஸ்லாமிய நாடுகளும் பாதிக்கப்படும்.
தொடர்ந்து ஆயுதங்களை இழந்து வருவதால், அமெரிக்காவும் கூடுதலான நெருக்கடியை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம்.
எது எப்படி இருந்தாலும், இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகரித்து அது உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய அபாயமும் இதற்கு பின்னால் இருக்கிறது.
இத்தகைய போர்ச் சூழலை யார் தான் தடுத்து நிறுத்த முடியும். ஐ.நா. சபை போன்ற ஐக்கிய அமைப்புகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருக்கின்றன அல்லது இருக்க வைக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
ஏற்கனவே ஈழத்தில் தமிழினம் பெரும் இன அழிப்பை சந்தித்தபோது, உலக நாடுகள் அதை எப்படி எதிர்கொண்டன?
அதேமாதிரியான நிலைதான் தற்போது ஈரானுக்கும் ஏற்பட்டிருக்கிறது.
அதிகபட்சமான ஜனநாயக உணர்வுடன் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்க மக்கள் தான் இதற்கொரு தகுந்த முடிவை நிகழ்காலத்திற்கேற்றபடி எடுக்க வேண்டும்.
– லியோ