லஞ்சத்தைக் குறைத்து, நிதியைச் சேமிக்க முடியும்!

அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு

மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியவை:

பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இதுவரை, பலர் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கேட்டது. ஆனால், கையெழுத்தாகவில்லை.

செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அது தேங்கிக் கிடக்கிறது.

யார் யார் மீது இணக்கமாக இருக்கிறார்கள். பாஜகவின் மறைமுக முகமாக திமுக இருக்கிறது.

திமுகவை பின்னாடி இருந்து செயல்பட வைப்பது பாஜக தான். இதில் மாற்றுக் கருத்து இல்லை.

செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் கோப்பில் ஏன் ஆளுநர் இதுவரை கையெழுத்து போடவில்லை. இதற்கு ஆளுநர் மற்றும் திமுக பதில் சொல்ல வேண்டும்.

முந்தைய 5 ஆண்டு ஆட்சி காலத்தில் குற்றச் சம்பவங்கள் மறைக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், தற்போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு தாட்சணையின்றி யார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகம் முழுதும் தனிப்பட்ட குற்றச் சம்பவங்கள் நடக்கிறது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசு போன அரசு போன்று மூடி மறைக்கவில்லை.

யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சிங்கப்பெண் படையைப் பெரிதாக்க திட்டமிட்டுள்ளார்.

லஞ்சத்தைக் குறைத்தாலே நிதியை சேமிக்க முடியும் என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய முதல்வர் முயல்கிறார்.

தமிழகத்தின் வளர்ச்சியில் முதல்வர் விஜய்க்கு எந்தவித சமரசமும் கிடையாது.

தமிழக மின் வாரியத்தின் நிலை குறித்த வெள்ளை அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்.”

– வைஷ்ணவி பாலு

Comments (0)
Add Comment